மயிலாப்பூர் சாய்பாபா கோவிலுக்கு மாதம் 80 லட்சம் வருமானம்.. ஏராளமான முறைகேடுகள் நடந்ததாக ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவில் நிர்வாகத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சாய்பாபா கோவிலுக்கு மாதம் ரூ.80 லட்சம் வரை வருமானம் வந்தது. அதை ரூ.30 லட்சம் என்று குறைத்துக் காட்டப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1941-ம் ஆண்டு சுதந்திர போராட்ட தியாகி நரசிம்ம சுவாமியால் சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவில் கட்டப்பட்டது. 'அகில இந்திய சாய் சமாஜ்' என்ற அமைப்பு இந்த கோயிலை பராமரித்து வருகிறது.இந்த கோயில் கடந்த 40 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில பிரபலம் அடைந்தது. இதனால் தினமும் பலலட்சம் வருமானம் வரத்தொடங்கியது. இந்த சூழலில் நிர்வாக முறைகேடுகள்அதிகமாகி வருவதாக 2001-ல் சென்னை ஐகோர்ட்டில் பக்தர்கள் ஹரிரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

Mylapore Sai Baba Temple High Court

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், அகில இந்திய சாய் சமாஜ் முன்னாள் நிர்வாகிகள் செய்த முறைகேடுகளை விசாரிக்கவும் கோவில் கமிட்டியை நிர்வகிக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய இடைக்கால நிர்வாக குழுவை அமைத்து உத்தரவிட்டது. இக்குழு இதுவரை 8 அறிக்கைகளைத் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறிய முக்கியமான விஷயங்களை பார்ப்போம்.

மயிலாப்பூர் சாய்பாபா கோவிலை நிர்வகிக்கும் அமைப்பில் ஏராளமான நிர்வாகம் மற்றும் நிதி ரீதியான முறைகேடுகள் நடந்திருக்கின்றன. சாய் சமாஜ்க்கு சொந்தமான கோயில் நிலத்தை அடமானம் வைத்து வங்கியில் ரூ.15 கோடி கடன் 2023-ம் ஆண்டு வாங்கப்பட்டுள்ளது. வங்கிக்கு பொய்யான விவரங்களும் தரப்பட்டிருக்கிறது. இந்த கடன் வாங்க சமாஜ் செயற்குழு அல்லது பொதுக்குழுவிடம் முறையான அனுமதியை பெறவில்லை.

இந்த கடனுக்கு மாதம் இஎம்ஐ ரூ.25 லட்சம் கட்டப்படுகிறது. சாய் வித்யாலாயா கட்டிடம் இடித்த இடத்தில், முறையான அனுமதி பெறாமல், ரூ.23.91 கோடிக்கு கல்யாண மண்டபம் கட்டப்பட்டிருக்கிறது. பக்தர்களிடம் இருந்து வந்த நிதியை ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பயன்படுத்தி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. சென்னையில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அச்சரப்பாக்கத்தில் ரூ.3.72 கோடிக்கு நிலம் வாங்கி, ரூ.2.92 கோடிக்கு விருந்தினர் மாளிகை கட்டப்பட்டிருக்கிறது. சமாஜ் நிர்வாகியாக இருந்தவரின் மனைவி நடத்தும் நிறுவனத்திடம் இருந்து கடந்த 2024-25 நிதியாண்டில் ரூ.98 லட்சத்துக்கு நெய் வாங்கப்பட்டிருக்கிறது.

முறையான அனுமதி இல்லாமல் கோவில் கருவறையையும் 2024-ம் ஆண்டு இடித்திருக்கிறார்கள். கருவறையில் உள்ள பளிங்கு சாமிச் சிலையை பூட்டி வளாகத்தில் வைக்கப்பட்டள்ளதால், கடந்த 1½ ஆண்டுகளுக்கு மேலாக பக்தர்களால் சிலையை எளிதாக அணுக முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த கோவிலுக்கு முன்பு மாதம் ரூ.80 லட்சம் வரை வருமானம் வந்தது. அதை ரூ.30 லட்சம் என்று குறைத்துக் காட்டப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையினை ஆய்வு செய்து வரும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் உத்தரவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+