மயிலாப்பூரில் "மயிலை" பார்த்தீங்களா? சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் ஓவர் ஆட்டம்.. இப்ப "ஸாரி" சொல்றாங்க
சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குள், சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆடிய 2 இளைஞர்களும், 'ஸாரி' கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.. இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டு வருவது வழக்கம்.. இந்த கோயில் வளாகத்தில், யாரும் போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது என்று ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதையும் மீறி சிலர் கோயில் வளாகத்தில் போட்டோக்களையும், வீடியோக்களையும் எடுத்து வருகின்றனர்... பக்தி காரணமாக இப்படி அவர்கள் செய்வதை, பலரும் தடுப்பதில்லை.. ஆனால், கோயில் வளாகத்துக்குள் சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆடி வீடியோ எடுத்திருக்கிறார்கள் 2 இளைஞர்கள்.
வீடியோ: vignesh_k_balan and tejas_haridas என்ற பக்கத்தில் இந்த வீடியோ வெளியாகி இருந்தது. இதை பார்த்ததும், பக்தர்கள் கொந்தளித்து போனார்கள்.. புனிதமான இடமாக கருதப்படும் கோயில் வளாகத்துக்குள், சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதா? என்று ஆவேசமானார்கள்.. 2 பேர் வீடியோ வெளியிட்டது சர்ச்சையானதையடுத்து, இது தொடர்பாக அறநிலையத்துறை போலீசிலும் புகார் தரப்பட்டது. சம்பந்தப்பட்ட 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மன்னிப்பு கோரி ட்விட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில், "போன டிசம்பர் மாதம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு நாங்கள் போயிருந்தோம்.. அங்கே ஒரு டான்ஸ் வீடியோ பண்ணியிருந்தோம்.. அந்த வீடியோவை டிசம்பர் மாதம் போஸ்ட் பண்ணியிருந்தேன்.
தப்பா போகுதே: நேத்து திடீர்னு அந்த வீடியோவை பார்த்துட்டு நிறைய கமெண்ட்கள் வர ஆரம்பித்துவிட்டது. அது என்னன்னு போய் நாங்கள் பார்த்தோம். அப்போதுதான், அந்த வீடியோ மக்களிடம் தவறாக சேர்ந்துள்ளது என்று தெரியவந்தது. வீடியோ தப்பா போகுதே என்று நினைத்து, நான் அந்த வீடியோவை டெலிட் செய்துவிட்டேன். அதுக்கு பிறகு ட்விட்டடிரிலும் பார்த்தேன். அங்கேயும் இதுபோலவே கண்டனம் இருப்பதை அறிந்தோம்.
இனிமேல் அதுபோன்ற வீடியோக்களை நாங்கள் பதிவிட மாட்டோம். அதுவும் கோயிலில் டான்ஸ் வீடியோ, அந்த மாதிரி பாடல்களுக்கு செய்ய மாட்டோம். முழுக்க முழுக்க இது எங்களுடைய தவறுதான். இதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
எங்களால் கோயில் நிர்வாகத்துக்கும், அறநிலையத்துறைக்கும் சிக்கலை தந்துள்ளது. அதனால், அவர்களிடம் எங்களுடைய மன்னிப்பை கேட்டுக் கொள்கிறோம். எங்கள் டான்ஸ் வீடியோ பார்த்துவிட்டு, யாராவது மனம் புண்பட்டிருந்தீர்களானால், அவர்களிடமும் நாங்கள் ஸாரி கேட்டுக் கொள்கிறோம். இனிமேல் இப்படி நடக்காமலும் நான் பார்த்து கொள்கிறேன்.. ஸாரி" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications