கர்நாடகா சட்ட சபை தேர்தலில் பிரபலமான மைசூர்பாக்கு
சென்னை: கர்நாடகா சட்ட சபை தேர்தல் 2023 மே 10 ஆம் தேதி புதன்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் அன்று அதிக பட்ச வாக்குகளை செலுத்துவதற்காக, பெங்களூரில் ந்ருபதுங்கா சாலையில் உள்ள பிரபல நிசர்கா கிராண்ட் ஹோட்டல் உரிமையாளர் திரு.கிருஷ்ணராஜ் அவர்கள், வாக்காளர்களுக்கு இலவச உணவு, மைசூர்பாக், வெண்ணெய் தோசை, ஜூஸ், மற்றும் 100 திரைப்பட டிக்கெட் வழங்கப்படும் என்று பலரை கவரும் வகையில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது.
தேர்தல் நாளில், வாக்களித்த பின்பு, விரலில் வைக்கப்பட்ட மை அழியாமல் காட்டுபவர்களுக்கு, இந்த ஹோட்டலில் உணவுகளில் இலவசங்கள் வழங்கப்படும் என்றும், முதன்முறை வாக்களிப்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. இது மக்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த முயற்சி கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் வெற்றி
நடந்து முடிந்த தேர்தலில், நீண்ட காலத்திற்கு பிறகு, காங்கிரஸ் வெற்றிபெற்று, விரைவில் ஆட்சி அமைக்கவுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் அநேக வாக்குறுதிகளையும், இலவசங்களை, தேர்தல் வாக்குறுதியாக அளித்தனர். காங்கிரஸ் கட்சி, ஆட்சி அமைத்த பின்பு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என்று நம்பப்படுகிறது. இந்த வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகளை வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடிவருகின்றனர்.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications