மிஷ்கினின் ஆபாச பேச்சு.. வெடித்து எழுந்த அருள்தாஸ்! நெட்டிசன்கள் வரவேற்பு
சென்னை: 'பாட்டல் ராதா' எனும் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசியிருந்த இயக்குநர் மிஷ்கின், ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார். அவரது பேச்சுக்கு நடிகர் அருள்தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் படைப்பாளிகளால் கொண்டாடப்படும் வெகுசில இயக்குநர்களில் மிஷ்கினும் ஒருவர். ஆனால் சமீபத்தில் அவர் பேசியிருந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் நெகட்டிவான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. திமுக முன்னாள் எம்பியான செந்தில்குமார் மிஷ்கினின் பேச்சுக்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்திருந்தார்.

"மிஷ்கின் மேடையில் பேசியது மிகவும் அநாகரிகமான அருவருப்பான பேச்சு. சிறிதளவும் நாகரிகமின்றி நான்காம் த(ரை)ர பேச்சாளரை போல் பேசியது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை முன்மாதிரியாக யாரும் பின்பற்றாதவாரு அவருக்கு கடின எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தலை உரியவர்கள் வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நடிகர் அருள்தாஸ் மிஷ்கினுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். 2K LOVE STORY எனும் திரைப்படத்தின் விழா ஒன்றில் பேசிய அருள்தாஸ், "மிஷ்கின் இவ்வளவு வல்கராக பேச வேண்டிய அவசியமில்லை. அந்த வீடியோவை பார்த்தேன். தலைகுணிவாக இருந்தது. இந்த மேடையில் எவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் வந்து பேசி சென்றிருக்கிறார்கள். அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட பத்திரிகையாளர்கள் இந்திருந்தார்கள். குறிப்பா பெண் பத்திரிகையாளர்கள் இருந்தார்கள். அங்கு வந்து ஆபசமாக பேசுவது சரியல்ல.
வெளியில் பேசுங்கள். ஆனால் மேடை நாகரிகம் என்று ஒன்று இருக்கிறது. அவ்வளவு புத்தகங்களை படித்திருக்கிறேன், உலக சினிமாவை பார்த்திருக்கிறேன் என்கிறீர்கள். ஆனால் அப்புறம் என்ன அறிவு இருக்கிறது உங்களுக்கு? இப்படியான பேச்சுக்கள் இங்கு மட்டும் கிடையாது, தொடர்ந்து பல மேடைகளில் மிஷ்கின் இதுபோன்று பேசி வருவதை நான் பார்த்திருக்கிறேன். பாலாவுடனான ஒரு விழாவில், அவரை ஒருமையில் பேசுவது, நேற்று இளையராஜாவை ஒருமையில் பேசியது.. நீ முதலில் யார் இப்படி பேசுவதற்கு?
ஏற்கெனவே சினிமாக்காரன் என்றாலே கிலு கிலுப்பானவன் என்றுதான் பார்க்கிறார்கள். அப்படி இருக்கும்போது நம்மை நாமே தாழ்த்தி பேசிக்கொள்வது சரியல்ல. இது என்னுடைய கண்டனமோ, வலியுறுத்தலோ அல்ல. என்னுடைய மனக்குமுறல்கள்தான்" எனறு அருள்தாஸ் பேசியிருக்கிறார்.
அருள்தாஸின் பதிலடி, சோஷியல் மீடியாக்களில் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எல்லோரும்தான் ஆபாசமாக பேசுகிறோம். ஆனால் அதை எங்கு, யாரிடம் பேசுகிறோம் என்பதில்தான் நாகரிகம் இருக்கிறது. எனவே, சினிமாக்காரர்களும் இந்த நாகரிகத்தை பின்பற்ற வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நீங்க சொல்லுங்க மக்களே.. மிஷ்கின் பேசியது சரியா, தவறா? இல்லை இது போன்ற பேச்சுக்களை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடலாமா?
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications