நடுராத்திரி அலறிய கவர்ச்சி நடிகை மாயா.. வீட்டு வாசலில் மர்ம நபர்களின் அட்டகாசம்.. சென்னையில்!
கவர்ச்சி நடிகை மாயாவின் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்
சென்னை: கவர்ச்சி நடிகை மாயா வீட்டின் கார் கண்ணாடியை யார் உடைத்தார்கள் என்று தெரியவில்லை.. இது சம்பந்தமாக சாலிகிராமம் போலீசார் கண்டுபிடித்து வருகிறார்கள்.
சென்னை சாலிகிராமம் புஷ்பா காலனியை சேர்ந்தவர் மாயா 60 வயதாகிறது.. அந்தக்கால சினிமா கவர்ச்சி நடிகை இவர். பிரபல கவர்ச்சி நடிகை பாபிலோனா இவரது பேத்தி.

கடந்த 2014-ம் ஆண்டு, மறைந்த ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது, "அம்மா வாழ்க. அம்மாவை விடுதலை செய்ய வேண்டும்' என கோஷமிட்டபடியே சாலையின் நடுவில் சென்று மாயா படுத்து கொண்டு, போலீஸ் கமிஷனர் ஆபீஸ் முன்பு தீக்குளிக்க முயன்று பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் மாயா.
மாயா, தனது காரை வழக்கமாக வீட்டின் முன்புதான் நிறுத்துவராம்.. அப்படித்தான் வேகன் ஆர் காரை இரவும் நிறுத்தி வைத்திருந்தார். திடீரென பயங்கர சத்தம் கேட்டது... இதனால் மாயா உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே அதிர்ச்சி அடைந்து வெளியே வந்து பார்த்தனர்.
அப்போது, மர்ம நபர்கள் சிலர் தப்பி ஓடுவது தெரிந்தது.. அங்கிருந்த காரின் முன் மற்றும் பின்பக்க கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது... இதை பார்த்து செய்வறியாமல் மாயா தவித்தார். உடனடியாக விரும்பாக்கம் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி பதிவுகளின்படி விசாரணை நடத்தி வருகின்றனர். வேண்டுமென்றே யாரேனும் கார் கண்ணாடியை உடைத்து சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மே மாதம் மாயாவின் மகன் விக்னேஷை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவமும் நடந்திருந்தது.. அதனால், முன்விரோதம் காரணமாக கண்ணாடியை உடைத்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவத்தால் சாலிகிராமம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications