மைசூர் டூ சென்னை வந்தே பாரத் ரெடி.. இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. அடேங்கப்பா சூப்பர் வசதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சென்ட்ரல் - மைசூர் இடையே, மற்றொரு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்.

நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்கள் இடையே இப்போது மொத்தம் 47 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. குறிப்பாக, தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, மைசூர், விஜயவாடா ஆகிய நகரங்களுக்கும், சென்னை எழும்பூர் - நெல்லை, திருவனந்தபுரம் - காசர்கோடு உள்ளிட்ட வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தென் மாவட்டம்: நம்முடைய தமிழகம் உட்பட தமிழ்நாடு - கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Mysuru - Bengaluru - Chennai route another New Vande bharat express launched today by PM Modi Excellent Facilities

விரைவாக செல்வதுடன், நேரமும் மிச்சப்படுத்தப்படுவதால், இந்த ரயில்களுக்கெல்லாம் பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.. எப்போதுமே ரிசர்வேஷன் நிரம்பியே உள்ளதாக செல்கிறார்கள். ஒருகட்டத்தில் கூட்டத்தை சமாளிக்க முடியாததால், சிறப்பு ரயில்களாகவும் இவைகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல் - கர்நாடக மாநிலம் மைசூர் இடையேயான கூடுதலாக, ஒரு வந்தே பாரத் ரயில் சேவையை இன்று 12ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

பிரதமர் மோடி: காணொலி வாயிலாக பிரதமர் மோடி இதனை துவக்கி வைக்கிறார்.. இதனை தவிர. 200-க்கும் மேற்பட்ட ரயில்வே மேம்பாலங்கள், ரயில் இன்ஜின் பராமரிப்புக்கான 40 பணிமனைகள், 50 மலிவு விலை மருந்தகங்கள் ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.

ஏற்கெனவே சென்னை - மைசூர் இடையே பெங்களூர் வழியாக வந்தே பாரத் ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது, சென்னை-மைசூர் விபி எக்ஸ்பிரஸ், சென்னை-மைசூர் சதாப்தி, சென்னை-பெங்களூர் சதாப்தி, சென்னை-பெங்களூர் டபுள் டெக்கர், சென்னை-பெங்களூர் ஓவர்நைட் எக்ஸ்பிரஸ் மற்றும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் என பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. இதைத்தவிர, வட மாநிலங்களிலிருந்து இயக்கப்படும் தினசரி மற்றும் வாராந்திர ரயில்கள் இந்த வழியாக செல்லும்.

முக்கிய வழித்தடம்: இப்படி பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டாலும், மிக முக்கிய வழிப்பாதையாக இது திகழ்வதால், பண்டிகை உட்பட முக்கிய தருணங்களில் டிக்கெட் கிடைக்காது. அதனால்தான், 2வது வந்தே பாரத் ரயில்களும் இதே வழிப்பாதையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இன்றைய தினம் துவக்க வைக்கப்படும் சென்னை சென்ட்ரல் - மைசூர் வந்தே பாரத் சேவையானது, 6 மணி நேரம் 30 நிமிடங்கள் பயணிக்கும் என்கிறார்கள்.

அறிவிப்பு:
இந்த வந்தே பாரத் ரயில் ஏப்ரல் 4-ம் தேதி வரை சென்னை - பெங்களூர் இடையே மட்டும் இயக்கப்பட்டு, மறுநாள் 5-ம் தேதியில் இருந்து மைசூர் வரை செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. கூடுதல் ரயில் நிலையங்களுடன் 6 மணி நேரம் 30 நிமிடங்களில் இந்த ரயில் பயணிக்கிறது.. அதேபோல, வாரந்தோறும் புதன்கிழமை மட்டும் இந்த ரயில் இயக்கப்படாது.

தினசரி காலை 6 மணிக்கு மைசூரில் புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மண்டியா (6.28), பெங்களூர் (7.45), கிருஷ்ணராஜபுரம் (8.04), காட்பாடி (10.33) வழியாக நண்பகல் 12.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.

மைசூரு: அதேபோல, மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு காட்பாடி (6.23), கிருஷ்ணராஜபுரம் (8.48), பெங்களூர் (9.25), மண்டியா (10.38) வழியாக இரவு 11.20 மணிக்கு மைசூர் ரயில் நிலையத்தை சென்றடையும். இப்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் இருக்கும் வசதிகளை விட இந்த புதிய வந்தே பாரத் ரயிலில் சில கூடுதல் வசதிகள் இடம் பெறுகிறது.

வெள்ளை + நீலம் கலந்த வந்தே பாரத் ரயிலுக்கு பதிலாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள வந்தே பாரத் ரயில் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+