நெருங்கிடுச்சே டைம்.. செவ்வாய்க்கிழமை.. திமுகவின் நிஜமான "முகமூடி".. என்.ஆர். தனபாலனுக்கு செம டென்ஷன்

காமராஜர் பற்றி பேச திமுகவினருக்கு எந்த தகுதியும் கிடையாது என்று என்ஆர் தனபாலன் சீறியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காமராஜர் பற்றி பேசுவதற்கு இன்றைய திமுக நிர்வாகிகள் யாருக்கும் எந்த ஒரு தகுதியோ அல்லது அருகதையோ இல்லை என்றும், பெருந்தலைவர் காமராஜர் பற்றிய பொய்யான தகவல்களை பேசி வரும் ஆ.ராசா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நாடார் சங்கம் கொந்தளித்துள்ளது..

தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் (கலை பண்பாட்டு இயக்கம்) சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா -இசை சங்கமம் சமீபத்தில் நடைபெற்றது.. இதில் திமுகவின் துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ ராசா பங்கேற்று பேசினார்.

வழக்கம்போல் திராவிடம் குறித்து விரிவாக இந்த கூட்டத்திலும் பேசிய ஆ.ராசா, தமிழ்நாடு பெயர் விவகாரம் குறித்தும் பேசினார்.. அதுதான் தற்போது சர்ச்சையாக வெடித்து கிளம்பி உள்ளது.

 உதடுகள் உச்சரிப்பு

உதடுகள் உச்சரிப்பு

ஆ.ராசா பேசும்போது, "திராவிட மாடல் என்பதை உச்சரிக்க முடியாத உதடுகள் இந்த மண்ணில் இருந்து வெளியே ஓட வேண்டிய காலக்கட்டத்தில், ஓடிய காலக்கட்டத்தில் திராவிட பொங்கல் என்ற தலைப்பில் கவிதை நிகழ்ச்சியை தந்திருப்பது உள்ளபடியே பாராட்டுக்குரியது. மகிழ்ச்சிக்குரியது. திராவிடம் என்றால் தமிழ். தமிழ் திராவிடத்தில் உள்ளது. காமராஜர் பல அணைகளை கட்டினார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் வைக்க முடியவில்லையே. அது அவருக்கு மிகப்பெரிய குறைபாடாக போய்விட்டது. காமராஜருக்கு எத்தனையோ பெருமைகள் என்பது உண்டு.

 பச்சை தமிழர்

பச்சை தமிழர்

6 முறை நாடாளுமன்ற உறுப்பினர். காங்கிரஸ் கட்சியின் தலைவர். 2 பிரதமர்களை உருவாக்கியவர். பல ஜனாதிபதிகளை உருவாக்கியவர். காமராஜர் தமிழ்நாட்டு மக்களை நேசித்தவர். பெரியாருக்கு பச்சை தமிழர் என அடையாளம் கொடுத்தவர். ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் தமிழ்நாடு என்ற பெயரை ஏற்று கொள்ளவில்லை. அதனால் அவருக்கு வீழ்ச்சி தொடங்கியது. இப்போது தமிழ்நாடு என சொல்ல சிலர் பயப்படுகிறார்கள். அவர்களுக்கும் வீழ்ச்சி தொடங்கி உள்ளது'' என்று ஆ.ராசா பேசியிருந்தார்.

 தனபாலன் ஆவேசம்

தனபாலன் ஆவேசம்

ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு நாடார் அமைப்புகள் ஆவேசமாகி உள்ளன.. இது தொடர்பாக சென்னையில் நாடார் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில், தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் தனபாலன் பேசும்போது, "பெருந்தலைவர் காமராஜரை பற்றி பேசுவதற்கு திமுகவினருக்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது.. மேடைகளில் பொய்யான தகவல்களை பொதுமக்களிடம் பேசி அதை மீடியாக்களில் பரப்ப வேண்டும் என்று ஒரு முயற்சிகளை வரலாறை திரிக்க பார்க்கின்றன.. திமுகவினரின் உண்மையான முகமூடி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தன் பேச்சிற்காக ஆ.ராசா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

 அசோக்நகர் மீட்டிங்

அசோக்நகர் மீட்டிங்

அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவருக்கு எதிராக கருப்பு கொடியும் காட்டப்படும். அவர் பொது மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் அவருடைய வீட்டை முற்றுகையிட்டு மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் நடத்துவோம்" என்று கூறியிருந்தார். இதையடுத்து, தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர். தனபாலன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், "சென்னை அசோக் நகரில் என்.ஆர்.தனபாலன் தலைமையில் நடைபெற்ற சங்கத் தலைவர்கள் கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

 கருப்பு கொடி

கருப்பு கொடி

ஆலோசனை கூட்டத்தில், நெல்லை, தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் பத்மநாபன், சந்திரன், ஜெயபால், மாரிதங்கம், மின்னல் ஸ்டீபன், முத்துரமேஷ், கொட்டிவாக்கம் முருகன், கோயம்பேடு வைகுண்டராஜா, ஸ்ரீனிவாசன், பாடி விஜயகுமார், பல்லாவரம் மணிகண்டன், வேல்முருகன், ஓட்டேரி மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். காமராஜர் பற்றி அவதூறாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து வருகிற 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல்கட்ட போராட்டமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+