விஜய் சேதுபதியை ராஜாவாக நிற்க வைத்து, நடிக்க வைத்து.. ராஜாவாகவே மாற்றிய ந.முத்துசாமி!
நடிகர் விஜய் சேதுபதியின் அசாத்திய வெற்றிக்கு பின் இருக்கும் முக்கியமான நபர்களில் ஒருவர் கூத்துப்பட்டறை ந.முத்துசாமி.
Recommended Video

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் அசாத்திய வெற்றிக்கு பின் இருக்கும் முக்கியமான நபர்களில் ஒருவர் கூத்துப்பட்டறை ந.முத்துசாமி.
கூத்துப்பட்டறையை நிறுவி தமிழக திரையுலகிற்கு பல பொன்னான நடிகர்களை வாரி வழங்கிய ந.முத்துசாமி இன்று காலமானார். இவரது இழப்பு தமிழ் திரையுலகை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
தஞ்சையில் பிறந்து சென்னையில் நாடகத்திற்காக வந்த அவர் பல சினிமா கலைஞர்களை உருவாக்கியது வரலாறு. கோலிவுட் சினிமா கடலில் முத்துசாமி அள்ளித்தந்த முத்துதான் விஜய் சேதுபதி.
[சங்கீதத்தை விட உயர்ந்தது நாடகம்.. கடைசி வரை கலையை சுவாசித்த ந. முத்துசாமி]

கற்றுக்கொடுத்தவர்
கோலிவுட்டின் கிங்காக மாறி இருக்கும் விஜய் சேதுபதிக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தது முத்துசாமிதான். விஜய் சேதுபதிக்கு நடிப்பு ஆர்வம் வந்து, செல்லும் திசை தெரியாமல் சுற்றிய போது அவருக்கு ''இப்படி போ, எல்லாம் சரியா நடக்கும்'' என்று கைகாட்டிய பிதாமகன் முத்துசாமி. தென்மேற்கு பருவக்காற்றில் விஜய் சேதுபதியை நிற்க வைத்து தமிழகம் முழுக்க நடிப்பு மழையை பொழிய வைத்த ஜாம்பவான் முத்துசாமி.

படத்தில் ஒரு காட்சி
உச்ச நட்சத்திரமாக உள்ள விஜய் சேதுபதி, கூத்துப்பட்டறையில் அக்கவுண்டண்டாக வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிஜ வாழ்க்கை சம்பவம் ''ஆண்டவன் கட்டளை'' படத்தில் காட்சியாக கூட வைக்கப்பட்டு இருக்கும். அந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பு பயிற்சி மையத்தில் கணக்கு பார்த்துக் கொண்டே நடிக்க கற்றுக்கொள்வார். அப்படி அருகே இருந்தே முத்துசாமி நடிப்பு திறமையை பார்த்து கற்றுக்கொண்ட விஜய் சேதுபதிதான், தற்போது தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறியுள்ளார்.

நல்ல நடிகர்
அந்த பயிற்சிதான் தற்போது விஜய் சேதுபதி மக்கள் செல்வனாக வலம் வர காரணம். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான நடிப்பை வெளிப்படுத்தும் விஜய் சேதுபதிக்கு கீழ் இருக்கும் ''வலுவான பேஸ்மெண்ட்'' முத்துசாமிதான். 96 படத்திலும் விக்ரம் வேதா படத்திலும் ஒரே வெண்தாடி வைத்தாலும் விஜய் சேதுபதி ஒன்றில் பாவமாகவும், இன்னொன்றில் கோபமாகவும் தெரிய காரணம் முத்துசாமிதான்.

பிடித்தவர் யார் தெரியுமா
முத்துசாமியே விஜய் சேதுபதி சிறந்த நடிகர்களில் ஒருவர் என்று புகழ்ந்து இருக்கிறார். அதேபோல் ஜோக்கர் பட குரு சோமசுந்தரம் இவரின் பட்டறையில் வைரம் தீட்டப்பட்ட இன்னொரு முத்து. ஆனாலும் இவருக்கும் பிடித்த நடிகர் யார் என்று இவரே கூறி இருக்கிறார். வேறு யார்.. சூப்பர் ஸ்டார் ரஜினிதானாம். இப்படி பல நூறு கலைஞர்களை உருவாக்கிய முத்துசாமி இன்று காலை இயற்கை எய்தினார்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications