• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அதிமுகவின் வெற்றியை சுமார் 60 தொகுதிகளில் காலி செய்த நாம் தமிழர் கட்சி.. முழு விவரம்

|

சென்னை: நாம் தமிழர் கட்சியால் அதிமுக மற்றும் அதன் கூடடணி கட்சிகளிடன வெற்றி சுமார் 60 தொகுதிகளில் பறிபோயுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல இடஙகளில் திமுக அதிமுக இடையிலான வெற்றி வித்தியாசத்தைவிட நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளை பெற்றுள்ளது. சில தொகுதிகளில் 20 ஆயிரம், 30 ஆயிரம் என்கிற அளவிற்கு வாக்குகளை வாங்கி உள்ளது.

    சுமார் 60 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை காலி செய்த நாம் தமிழர் கட்சி

    சென்னையில் திருவெற்றியூர், தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, பொன்னேரி, செய்யூர், திருப்போரூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட சென்னை மண்டலத்தின் பல தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை நாம் தமிழர் கட்சி காலி செய்துள்ளது.

    சென்னை தி நகரில் வாக்கு வித்தியாசம் திமுக அதிமுக இடையே வெறும் 137 வாக்குகள் தான். ஆனால் நாம் தமிழர் வேட்பாளர் வாங்கிய வாக்குகள் 14567 வாக்குகள் ஆகும். இதேபோல் மைலாப்பூரில் 10 10124 வாக்குகள் வாங்கியுள்ளது நாம் தமிழர் கட்சி. வேளச்சேரியில் 14130 வாக்குகள் பெற்றுள்ளது.

    234 தொகுதிகளில் 'எளிய வீட்டு பிள்ளைகள்' நாம் தமிழர் வேட்பாளர்கள் பெற்ற அசத்தல் வாக்குகள் முழுவிவரம் 234 தொகுதிகளில் 'எளிய வீட்டு பிள்ளைகள்' நாம் தமிழர் வேட்பாளர்கள் பெற்ற அசத்தல் வாக்குகள் முழுவிவரம்

    செய்யூர்

    செய்யூர்

    செங்கல்பட்டு தொகுதியில் 26868 வாக்குகள் வாங்கி இருந்தது. சோழிங்கநல்லூர் தொகுதியில் 26ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வாங்கி இருந்தது. திருப்போரூரில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள், செய்யூரில் சுமார் 10 ஆயிரம் வாக்குகள், பொன்னேரியில் சுமார் 19 ஆயிரம் வாக்குகள் வாங்கி இருந்தது நாம் தமிழர் கட்சி. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல தொகுதிகளில் சுமார் 18 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வாங்கி உள்ளது நாம் தமிழர் கட்சி.

    அணைக்கட்டு

    அணைக்கட்டு

    இதேபோல் வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் பல தொகுதிகளில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றியை நாம் தமிழர் கட்சி தடுத்துள்ளது அரக்கோணம், காட்பாடி, அணைக்கட்டு, வேலூர், குடியாத்தம், திருப்பத்தூர், செங்கம், கலசப்பாக்கம், போளூர், செய்யாறு உள்ளிட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியால் அதிமுக கூட்டணி தோல்வியை தழுவியது,.

    தாராபுரம்

    தாராபுரம்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், பர்கூரில் நாம் தமிழர் கட்சியின் வாக்குள் திமுக அதிமுக வேட்பாளர்களிடையேயான வாக்கு வித்தியாசத்தைவிட மிக அதிகம் ஆகும். இதேபோல் காங்கேயம், திருப்பூர் தெற்கு, தாராபுரம், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு உள்ளிட்ட தொகுதிகளில் நாம்தமிழர் கட்சி அதிக வாக்குகள் வாங்கி அதிமுகவின் வெற்றியை காலி செய்துள்ளது, அங்கு திமுக கூட்டணியே வெற்றி பெற்றது. இதேபோல் ஈரோடு, கிழக்கு, ஊட்டி, குன்னூர், அந்தியூர், அரியலூர், ஜெயங்கொண்டம், மதுரை தெற்கு உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி நாம் தமிழர் கட்சியால் பறிபோயுள்ளது,

    காரைக்குடி

    காரைக்குடி

    ஆண்டிபட்டி, பாபநாசம், திருவிடைமருதூர், கந்தர்வகோட்டை, திருமயம், பரமக்குடி, திருவாடனை, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, மானாமதுரை, காரைக்குடியிலும் அதிமுக கூட்டணியின் வெற்றியை நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் தடுத்துள்ளது. சங்கரன் கோவில், வாசுதேவநல்லூர், ராதாபுரம்,ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றியை நாம் தமிழர் கட்சி தடுத்துள்ளது.

    English summary
    Naam Tamil Party vacated AIADMK's victory in about 60 constituencies include T.Nagar, Mylapore, Velachery, Ponneri, Seiyur, Thiruporur, Uttiramerur, Kanchipuram, Chengalpattu, Cholinganallur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X