விஜயலட்சுமி கேஸ்: அன்னைக்கும் இன்னைக்கும் அத்தனைக்கும் திமுகதான் காரணம்- ஒரே போடாகப் போட்ட சீமான்!
சென்னை: நடிகை விஜயலட்சுமி தம் மீது தொடர்ந்து புகார் தருவதற்கு காரணமே திமுகதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் விஜயலட்சுமி விவகாரத்தில் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்று சீமான் ஆஜரானார். அவரிடம் சுமார் 2 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: 2012-ல் நடிகை விஜயலட்சுமி ஏற்கனவே வழக்கை திரும்பப் பெற்றிருந்தார். தற்போது திரும்பவும் வழக்கை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுள்ளார்.

இந்த அழைப்பாணை கடந்த 9-ந் தேதி என்னை வர சொல்லி இருந்தனர். அன்று நான் வர முடியவில்லை. மறு அழைப்பாணை வரும் போது 18-ந் தேதி வருவதாக சொல்லி இருந்தேன். விநாயகர் சதுர்த்தி நாள். எனக்கு பிரச்சனை இல்லை.. வருகிறேன் என சொல்லிவிட்டேன். அதனால் நாம் வர வேண்டும். நாளை நான் அழைப்பாணை அனுப்பியும் சட்டத்துக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்கிற குற்றச்சாட்டு வரக் கூடாது என்பதால் இன்று வந்தேன். போலீசார் இன்று வந்தே ஆகனும் என சொல்லவில்லை. நான் தான் ஏற்கனவே கூறியபடி இன்று வந்து, போலீஸ் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் கொடுத்துவிட்டுப் போகிறேன்.
2011-ல் இந்த வழக்கு கொடுக்கப்படுகிறது. அப்போதே திமுக- காங்கிரஸ் தூண்டுதலில் புகார் கொடுக்கப்பட்டது. அன்றைக்கு முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா, இதில் உண்மைத்தன்மை என்ன என கேட்கிறார். இதேவேலையைத்தான் விஜயலட்சுமி ஒவ்வொரு முறையும் செய்கிறார் என உண்மைத்தன்மை தெரியவந்ததால் throw it என தூக்கிப் போட்டுவிட்டார். அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி காலத்திலும் நிறைய புகார் கொடுத்தாங்க.. அவங்க எடுக்கவில்லை.
திமுக என்னை சமாளிக்க முடியவில்லை. ஏற்கனவே என் மீது மக்களுக்காக போராடியதாக 128 வழக்குகள் இருக்கின்றன. அந்த வழக்கு மக்களுக்கான போராடியது. அதை எடுக்க முடியவில்லை. பெண்கள் வைத்து வழக்கு என்பதால் என்னை அசிங்கப்படுத்திவிடலாம்; மக்களிடம் இருந்து அன்னியப்படுத்திவிடலாம்; அதனால் மதிப்பை சிதைச்சுடலாம்; ஒரு நற்பெயரை சிதைக்கலாம் என்பதற்காகத்தான் இந்த புகார். நாட்டில் மக்களுக்கு எந்த பிரச்சனையுமே இல்லை. ஒரு மாதம் பேசக் கூடிய பேச்சா இது?
விஜயலட்சுமி முதலில் திருமணமானது என்று மட்டும் புகார் கொடுத்தார். இப்போது கொடுத்த புகாரில் ரூ60 லட்சம் பணம், நகை கொடுத்ததாக சொல்லுகிறார். இப்படி ஒவ்வொன்றையும் புதிது புதிதாக சேர்த்து சேர்த்து சொல்லும் போது ஏன் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறீர்கள் என யாரும் கேட்கவில்லை. ஆக இது வெறும் அவதூறு. ஒரு போராட்டக்காரனை வெறும் அவதூறு வைத்து மூடிவிடலாம் என்றால் எப்படி சகிப்பது? போலீசார் விசாரணையின் போது ரூ60 லட்சம் பணம் , ரூ30 லட்சம் மதிப்பிலான நகைகள் கொடுத்தாரா விஜயலட்சுமி என கேட்டனர். ஒன்னும் கொடுக்கவில்லை என்றேன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications