மானங்கெட்ட ஒருத்தியோடு சண்டையா? பெரியார் என்ன சொன்னார்னா.. விஜயலட்சுமி மீது சீமான் கடும் தாக்கு!
சென்னை: தம் மீது தொடர்ந்து புகார் தெரிவித்து வரும் நடிகை விஜயலட்சுமி மீது மான நட்ட வழக்கு தொடரப் போவது இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னை செய்தியாளர்களிடம் இன்று சீமான் கூறியதாவது: மானம் இருக்கிறவங்க மீது வழக்கு போட்டா நட்ட ஈடாக கேட்டு வாங்க முடியும். பெரியார் திரும்ப திரும்ப சொல்றார்ல.. மானமுள்ள ஆயிரம் பேருடன் சண்டை செஞ்சுடலாம்டா.. மானம் கெட்ட ஒருத்தனோடு சண்டையே போட முடியாது என்கிறார்..

மானங்கெட்ட ஒருத்தியோடு நானும் சரிக்கு சரி நின்று சண்டை போடனும் என சொல்றீங்களா? நான் என்ன வேலை செஞ்சுகிட்டு இருக்கிறேன்.. அவங்க என்ன வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க? பத்திரிகையாளர்கள் இதை எல்லாம் என்கிட்ட கேட்கவே கூடாது.
நான் விஜயலட்சுமி விவகாரத்தை பேசுவதையே ரொம்ப நாளா...... அருவெறுப்பா நினைக்கிறேன். அதனால அமைதியாவே இருந்தேன். என்னுடைய அமைதியால் அவங்க சொல்றது எல்லாம் உண்மைன்னு நம்புற மாதிரி வந்துடுது.. அதனால பேச வேண்டியதிருக்கு.
நீண்டகாலமாக திமுக என்னை பாஜகவின் பி டீம் என்றது. இப்போது தம்பி அண்ணாமலை என்னை திமுகவின் பி டீம் என்கிறார். நான் உண்மையிலேயே யாருடைய பி டீம் இல்லை. நான் தான் மெயின் டீம். இவ்வாறு சீமான் கூறினார்.
2008-ம் ஆண்டு சீமான் தம்மை திருமணம் செய்து கொண்டார்; சில ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு பணம், நகைகளை பறித்துக் கொண்டு ஏமாற்றிவிட்டார் என்பது நடிகை விஜயலட்சுமியின் புகார். இது தொடர்பாக 2011-ல் விஜயலட்சுமி புகார் கொடுத்திருந்தார். ஆனால் அந்த புகார் கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. தற்போது விஜயலட்சுமி மீண்டும் சீமான் மீது புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி உள்ளனர். நடிகை விஜயலட்சுமியிடம் திருவள்ளூர் மாஜிஸ்திரேட் வாக்குமூலத்தை பதிவும் செய்துள்ளார்.
ஆனால் சீமான் தொடர்ந்து தம் மீதான விஜயலட்சுமியின் புகார்களை மறுத்து வருகிறார். தற்போது விஜயலட்சுமியை மிகவும் காட்டமாகவும் சீமான் விமர்சிக்கவும் தொடங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications