கட்டுத்தொகையே கைக்கு வராது.. விக்கிரவாண்டியில் டெபாசிட்டை இழக்கும் நாம் தமிழர்? மொத்தமாக போச்சே
சென்னை: விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்து உள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் படி, நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் ஒரு குறிப்பிட்ட கட்டு தொகையை டெபாசிட் செய்வது கட்டாயமாகும். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ரூ.25 ஆயிரமும், சட்டமன்றத் தேர்தல் என்றால் ரூ.10 ஆயிரமும் ஆகும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கும் இதே தொகைதான். இந்தத் தொகை தேர்தல் ஆணையத்திடம் டெபாசிட் செய்யப்பட்டு தேர்தலில் பாதுகாப்பு வைப்புத்தொகை என்று அழைக்கப்படுகிறது.

தீவிர உண்மையான வேட்பாளர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதை உறுதி செய்ய வைப்புத் தொகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இப்போது, ஒரு தொகுதியில் பதிவான மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கிற்குக் குறைவாக வேட்பாளர் பெற்றால், அவரது பாதுகாப்பு வைப்புத் தொகை இழக்கப்படும். அதாவது டெபாசிட் இழப்பார். அந்த தொகை கிடைக்காது. அதாவது ரூ.25,000 அல்லது ரூ.10,000 தொகை டெபாசிட் செய்த வேட்பாளருக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் திருப்பி அளிக்கப்படாது.
உதாரணமாக, ஒரு சட்டமன்றத் தொகுதியில் 200,000 வாக்குகள் பதிவாகியிருந்தால், பாதுகாப்பு வைப்புத் தொகையைச் சேமிக்க, ஒவ்வொரு வேட்பாளரும் மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கைப் பெற வேண்டும். அதாவது ஒவ்வொரு வேட்பாளரும் 33,332 வாக்குகளுக்கு மேல் பெற வேண்டும்.
எத்தனை வாக்குகள்: விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடந்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவு ஆனது. அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்திருந்த நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அப்படி இருக்க 82.48% வாக்குகள் பதிவு ஆனது
இதன் அர்த்தம் அதிமுக தேர்தல் புறக்கணிப்பை மக்கள் கண்டுகொள்ளவில்லை. அதிமுகவிற்கு பாரம்பரியமாக வாக்களிக்கும் மக்களும் அதிமுக இல்லை என்றாலும் கவலைபடாமல் வந்து வாக்களித்து உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிட்ட போது பதிவான வாக்குகள்-182426.
எடப்பாடி பழனிச்சாமி தேர்தலை புறக்கணிப்போம் அறிவிப்பு செய்தபோது பதிவான வாக்குகள்-195495. இதன் அர்த்தம் அதிமுக இல்லையென்றாலும் அதை மக்கள் பொருட்டாக கருதவில்லை. இங்கே டெபாசிட் பெற தேவையான வாக்குகள் 32583 ஆகும்.
டெபாசிட் இழக்கிறது; விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்து உள்ளது. அதிமுகவின் வாக்கு வங்கியும் கூட நாம் தமிழருக்கு செல்லவில்லை. 38128 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 13,604 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 3305 வாக்குகள் பெற்றுள்ளார்.
விக்கிரவாண்டியில் பதிவான வாக்குகள்-195495. இங்கே டெபாசிட் பெற தேவையான வாக்குகள் 32583 ஆகும். அப்படி இருக்க நாம் தமிழர் 10 ஆயிரம் வாக்குகள் பெறுவதே சந்தேகம் ஆகி உள்ளது. இதுவரை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 3305 வாக்குகள் பெற்றுள்ளார். விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications