“மைக்” சின்னத்திலும் சிக்கல்.. ஓட்டு மெஷினில் ஸ்விட்ச் உள்ள மைக் உள்ளதாக நாம் தமிழர் கட்சி புகார்!
சென்னை: எங்களுக்கு கொடுத்த மைக் சின்னம் வேறு என நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. எங்களுக்கு கொடுத்தது ஸ்விட்ச் இல்லாத மைக் சின்னம், ஆனால், ஸ்விட்ச் உள்ள மைக் சின்னத்தை வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டுகிறார்கள் என நாதகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி "மைக்" சின்னத்தில் போட்டியிடுகிறது. கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சி கேட்டு வந்த நிலையில், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிவிட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு அதனை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க முடியாது என கைவிரித்தது தேர்தல் ஆணையம்.

சீமான் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்ததையடுத்து சீமானின் நாம் தமிழர் கட்சி இந்த முறை "மைக்" சின்னத்தில் போட்டியிடுகிறது.
சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 வேட்பாளர்கள் மைக் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அவர்களில் 20 பேர் ஆண்கள், 20 பேர் பெண்கள். சீமானின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மைக் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். முன்பு கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு வந்த சீமான், மைக் சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்க தீவிரமாக பரப்புரை செய்து வருகிறார். இந்நிலையில் புது பிரச்சனை ஒன்று எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்களில் கட்சி சின்னம் வேட்பாளர் பெயர், புகைப்படம் ஆகியவை ஒட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டியுள்ள மைக் சின்னம் வேறு மாதிரி இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தேர்தல் ஆணையம் எங்களுக்கு கொடுத்த மைக் சின்னம் வேறு, வாக்குப்பதிவு எந்திரங்களில் தற்போது ஒட்டப்பட்டு வரும் மைக் சின்னம் வேறு என நாம் தமிழர் கட்சி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளது. எங்களுக்கு கொடுத்தது ஆன் - ஆஃப் ஸ்விட்ச் இல்லாத மைக் சின்னம், ஆனால், ஸ்விட்ச் உள்ள மைக் சின்னத்தை வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டுகிறார்கள் என நாதகவினர் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தங்களுக்கு ஒதுக்காத கரும்பு விவசாயி சின்னத்தை ராமநாதபுரம் உள்ளிட்ட சில தொகுதிகளில் போட்டியிடும் சுயேட்சைகளுக்கு ஒதுக்கியதற்கு நாம் தமிழர் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஸ்விட்ச் இல்லாத மைக்கை ஒதுக்கிவிட்டு, தற்போது வாக்குப்பதிவு எந்திரங்களில் ஸ்விட்ச் உடன் கூடிய மைக் படத்தை ஒட்டி இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் கொந்தளித்துள்ளனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications