எவ்வளவு பெரிய லிஸ்ட்டு.. வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி சொன்ன சீமான்! அன்புத் தம்பி விஜயை மறக்கலையே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் நேற்று பிறந்தநாள் கொண்டாடினார். இதை அடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் சீமான் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் அவருக்கும், பிற தலைவர்களுக்கும் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தனது 58 வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்தார் நடிகர் விஜய்.

vijay seeman chennai

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர்," நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் 'சகோதரர்' சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியிருந்தார்.

சீமான் பிறந்தநாள் அன்று விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் ஆரோக்கியம் என்று பார்க்கப்படுகிறது. விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்த சீமானுக்கு அவர் வாழ்த்து தெரிவித்திருப்பதை நாம் தமிழர் கட்சியினர் கூட பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார் சீமான்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில்,"என்னுடைய பிறந்த நாளில் வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்த, முன்னாள் முதல்வர் பெருமதிப்பிற்குரிய ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும்,முன்னாள் மாநில ஆளுநரும், பாஜக-தமிழ்நாடு முன்னாள் தலைவருமான அம்மையார் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கும்,

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தமிழ்த்தேசியப் பேராசான் பெருமதிப்பிற்குரிய பெருந்தகை எங்கள் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கும், முத்தமிழ்ப்பேரறிஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா வைரமுத்து அவர்களுக்கும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரும், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனருமான பெருமதிப்பிற்குரிய ஐயா பாரிவேந்தர் அவர்களுக்கும், மனித நேய அறக்கட்டளை நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா சைதை துரைசாமி அவர்களுக்கும்,

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் பேரன்பிற்கினிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கும், புரட்சித்தமிழன் பேரன்பிற்கினிய அண்ணன் சத்தியராஜ் அவர்களுக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஐயா டி.டி.வி.தினகரன்அவர்களுக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அன்பு அண்ணன் முனைவர் பெ.ஜான்பாண்டியன் அவர்களுக்கும், பாஜகவின் மாநிலத் தலைவர் அன்புத்தம்பி கு.அண்ணாமலை அவர்களுக்கும்,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கும், பாஜகவின் மகளிர் அணி தேசியச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்புச்சகோதரி வானதி சீனிவாசன் அவர்களுக்கும், அன்பு அண்ணன் நடிகர் இராமராஜன் அவர்களுக்கும், அண்ணன் இயக்குநர் விக்ரமன் அவர்களுக்கும், அன்புத்தம்பி இயக்குநர் சேரன் அவர்களுக்கும், முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் அன்பிற்கினிய இளவல் சேது.கருணாஸ் அவர்களுக்கும், மற்றும் அரசியல், திரைத்துறையைச் சேர்ந்த ஆளுமைகளுக்கும், தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களுக்கும், உலகம் முழுவதுமுள்ள தாய்த்தமிழ் உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும், அன்பிற்கினிய தம்பி-தங்கைகளுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்வதில் உளம் மகிழ்கிறேன்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+