பாஜகவே கொஞ்சம் யோசிக்குமே! 2026 தேர்தலுக்கு சீமான் கையில் ப்ளான்! களமிறங்கும் பிராமண வேட்பாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வரும் நிலையில் அதிமுக திமுகவுக்கு இணையாக தேர்தல் பணிகளை வேகமாக மேற்கொண்டு வருகிறது நாம் தமிழர் கட்சி. இந்த நிலையில் தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க நாம் தமிழர் கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அனைத்து தனித் தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்கள், இதுவரை இல்லாத அளவு பிராமண வேட்பாளர்களை களம் இறக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. பிராமண வேட்பாளர்களில் அதிகம் பேர் பெண்களாக இருப்பார்கள் எனவும் நாம் தமிழர் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி (நாதக) தனது தேர்தல் வியூகங்களை தெளிவாக அமைத்து அரசியல் களத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஏற்கனவே 2026 சட்டமன்ற தேர்தல் தனித்துத் தான் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கும் அந்தக் கட்சி, தற்போது வேட்பாளர் தேர்விலும் அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, வரும் தேர்தலில் பல முக்கிய மாற்றங்களை செய்ய நாம் தமிழர் கட்சி தலைமை முடிவெடுத்துள்ளது.

Naam Tamilar Katchi seeman Brahmin

நாம் தமிழர் கட்சி

அதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து தனித் தொகுதிகளிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், மேலும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஐந்து இடங்களில் வாய்ப்பளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை எதுவும் செய்யாத அளவிற்கு வித்தியாசமான முடிவாகும். இதுவரை அதிமுக, பாஜகவில் மட்டுமே பிராமண வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அதிகபட்சம் தமிழகத்தின் சென்னையில் உள்ள மைலாப்பூர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் மட்டுமே பிராமண வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள்.

சீமான் தேர்தல் திட்டம்

இந்நிலையில், கடந்த ஒன்றாண்டு காலமாகவே தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நாம் தமிழர் கட்சி, பூத் கமிட்டி அமைத்தல், மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பிரச்சார நிகழ்ச்சிகள் என அரசியல் களத்தில் திமுக, அதிமுகவுக்கு இணையாக வேகமாக முன்னேறி வருகிறது. இதுவரை 150-க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் மீதமுள்ள தொகுதிகளுக்கான தேர்வும் முடிவடையும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம்

இந்நிலையில், பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் 234 தொகுதிகளிலும் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் சமமான வாய்ப்பு அளிக்கப்படும் என கட்சி முன்னதாக தெரிவித்திருந்தது. அதன்படி 117 ஆண் வேட்பாளர்களும், 117 பெண் வேட்பாளர்களும் போட்டியிட உள்ளனர். எனினும், இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் பெண்களுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும் என்றும், இது தமிழக அரசியலில் பெண்களின் பங்கினை வலுப்படுத்தும் பெரும் முன்னேற்றமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பிராமண வேட்பாளர்

மேலும், பிராமண சமூகத்தினருக்காக 5 தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு கும்பகோணம் அல்லது மயிலாப்பூர் போன்ற சில தொகுதிகளில் மட்டுமே பிராமண வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், இம்முறை மயிலாப்பூர், ஆலந்தூர், தி.நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட 4 தொகுதிகளில், குறிப்பாக அவற்றில் நான்கு பேர் பெண்கள் போட்டியிடும் வகையில் பிராமண வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி எடுத்துள்ள இந்த முடிவுகள், தமிழக அரசியலில் பெண்களின் அரசியல் பங்கு மற்றும் சமூக பிரதிநிதித்துவத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

வேட்பாளர் பட்டியல்

அதே நேரத்தில் சீமானின் இந்த முடிவு கை கொடுக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. திராவிட கொள்கைகளில் ஊறிப்போன தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு மனநிலை அதிகமாக இருக்கிறது. அதனால் தான் கும்பகோணம் மயிலாப்பூர் தொகுதிகளில் மட்டும் பிராமண வேட்பாளர்கள் போட்டியிட்டு வந்தனர். அவர்களை தமிழகம் முழுவதும் இருக்கும் தொகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+