சின்னத்துக்கு வாக்கு இல்லை.. எண்ணத்துக்கே ஓட்டு! ஓட்டுகளை அள்ளிய ’மைக்’.. ஆமா ‘விவசாயி’ என்ன ஆனார்?
சென்னை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக மைக் சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியினர் தமிழக முழுவதும் 8 சதவீத வாக்குகளை பெற்று மாநிலக் கட்சி அங்கீகாரத்தை
பெற்றிருக்கின்றனர். முன்னதாக நாம் தமிழர் கட்சி வசம் இருந்த கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அது பெற்ற வாக்கு குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பதினெட்டாவது மக்களவைக்கான 543 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி தவிர்த்து அனைத்து வேட்பாளர்களுமே படுதோல்வியை சந்தித்தனர். அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சி சிறப்பான முன்னேற்றத்தை சந்தித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அந்த கட்சியினர் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தாலும் 8.1 சதவீத வாக்கை பெற்று மாநில கட்சிகளில் சிறந்த வாக்கு வங்கியை பதிவு செய்திருக்கிறது. இதன் மூலம் அந்த கட்சி மாநில கட்சி அங்கீகாரத்தை பெற்று இருக்கிறது.
2016 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக அரசியலில் கால் பதித்த நாம் தமிழர் கட்சி அதற்குப் பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் தனது வாக்கு வங்கியை அதிகரித்து வருகிறது. 2016ல்வெறும் ஒரு சதவீத வாக்கு வங்கியை வைத்திருந்த அந்த கட்சி 2019 3.8 சதவீதமாக அதிகரித்தது. 2021ல் 6.7 சதவீதமாக உயர்ந்த அந்த கட்சியின் வாக்கு சதவீதம் தற்போது 2024ல் 8.1 சதவீத வாக்குகளை குவித்துள்ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்று என களமிறங்கிய நாம் தமிழர் கிட்டத்தட்ட அதில் பாதியை தாண்டிவிட்டது என சொல்லலாம்.
வாக்கு சதவீதத்தில் மட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 12 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கின்றன. ஏழு பேர் 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வாக்குகளை பெற்றிருக்கின்றனர். சிவகங்கையில் அதிகபட்சமாக நாம் தமிழர் வேட்பாளர் 1.63 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறார்.
கிராமப்புறங்கள் தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது. பல இடங்களில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாக இருந்தது. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி வருமா என்ற கேள்வி இருந்தாலும் திராவிட கட்சிக்கு வாக்களிக்க விரும்பாத ஒரு வாக்காளர்கள் நிச்சயமாக நாம் தமிழர் கட்சியை தேர்ந்தெடுக்கின்றனர் என்பது தேர்தல் முடிவுகளின் படி தெரிய வந்துள்ளது.
தமிழக தேர்தலில் பதிவான வாக்குகளை சுமார் 35 லட்சம் வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றிருக்கிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பாகவே நாம் தமிழர் கட்சி பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குறிப்பாக அந்த கட்சி பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு வழங்கப்பட்டது. மாநில கட்சி அந்தஸ்தை பெறாததால் கரும்பு விவசாயி சின்னம் கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா அய்க்யாதா கட்சி மற்றும் சில சிகிச்சைகளுக்கு ஒதுக்கப்பட்டது.
இதனையடுத்து மைக் சின்னத்தை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பே பெற்ற சீமான் அதனை தமிழகத்தில் சுமார் 35 லட்சம் வாக்காளர்களுக்கு கொண்டு சென்றிருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வாக்கு விவரம் தற்போது தெரிய வந்திருக்கிறது. சென்னை வடக்கு, மத்திய சென்னை , வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி ஆகிய 18 தொகுதிகளில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
அதில் அதிகபட்சமாக திருப்பூரில் போட்டியிட்ட சுயேச்சை 7125 வாக்குகளை பெற்றிருக்கிறார். குறைந்தபட்சமாக சேலத்தில் போட்டியிட்ட ஒரு சுயேச்சை 2411 வாக்குகளை பெற்றிருக்கிறார். மற்ற தொகுதிகளில் 3 ஆயிரம், 4 ஆயிரம், 5 ஆயிரம் என்று அளவிலேயே கரும்பு விவசாயிக்கு வாக்குகள் விழுந்து இருக்கிறது. ஒட்டுமொத்தமாக சுமார் 79 ஆயிரத்து 300 வாக்குகள் விவசாயி சின்னத்திற்கு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் பெரிய அளவிலான தாக்கம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்குகள் கரும்பு விவசாயி சின்னத்திற்கு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
Land Rover Defender கான்வாயில் வரும் ஸ்டாலின் பெயரில் ஒரு வாகனம் கூட இல்லை! சீமான் சொத்து எவ்வளவு? -
யாருக்கு ஓட்டு போட போறீங்க! வாரிசு அரசியலுக்கா? சீமான் சட்டசபைக்கு போகனும்! சீனுக்குள் வந்த சேரன்! -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
ஒரே ஒரு தோட்டா.. காட்டி விடுவேன் டாட்டா.. சமூக விரோதிகளுக்கு சீமான் வார்னிங் -
என்னது திமுகவுக்கு வாழ்த்தா? பெரம்பலூர் நாம் தமிழர் வேட்பாளரை மாற்றிய சீமான்.. என்ன நடந்தது? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்?











Click it and Unblock the Notifications