2026ல் ஒரே ஒரு கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கு.. ட்விஸ்ட் கொடுத்த சீமான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலாக தெரிவித்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக கருத்து கூற மறுத்த சீமான், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்றும் விமர்சித்துள்ளார்.

வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து சீமான் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

Seeman NTK Donald Trump

அதில், வக்ஃப் வாரிய சட்டத்தில் ஏற்கனவே இருந்த நடைமுறை மாற்றப்பட்டிருப்பது ஆபத்தான போக்காகும். இந்து மக்களை மகிழ்விப்பதற்காக இதுபோன்ற சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். அதேபோல் இஸ்லாமியர்கள் வாக்குகள் தேவையில்லை என்றும் செய்ததாகவே பார்க்கிறேன். தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை வசம் 38 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது என்று கூறுகிறார்கள்.

அதுதொடர்பாக விசாரிக்க இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கொண்ட குழுவை அமைத்தால் ஏற்பார்களா? திருப்பதி தேவஸ்தானத்தில் 2 இஸ்லாமியர்களை சேருங்கள் பார்க்கலாம். சட்டத்தை இயற்றிவிட்டார்கள். அதனை மாநில அரசுகள் நிர்வகிக்கலாம் என்று கூற வேண்டும். ஆனால் மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் என்பது சரியல்ல. அவர்கள் யார் கட்டுப்பாட்டில் இருப்பார்கள் என்பது தெரிந்த ஒன்றுதான் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு, அதில் கருத்து கூற ஒன்றும் கிடையாது. கூட்டணி தொடர்பாக அதிமுக தான் முடிவு எடுக்க வேண்டும். எல்லா விஷயங்களுக்கும் கருத்து சொல்வது கண்ணியமாகவோ, நாகரீகமாகவோ இருக்காது. எங்களை பொறுத்தவரை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒன்றுதான்.

ஊழல், லஞ்சம், சாராயம், கொலை, கொள்ளை, இயற்கை வளங்கள் கொள்ளை, மணல் கொள்ளை என்று எல்லாம் ஒரே மாதிரிதான். இவர்களை ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று காமராசர் சொன்னார். அந்த மட்டையை நார் நாராக திரிக்கவே நாங்கள் இருக்கிறோம். அதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாதக கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கு.. அது அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+