’மைக்’ சின்னம் அண்ணனுக்கு ஆதரவு கொடுத்த தளபதி? G.O.A.T ரீசண்ட் போஸ்டர கவனிச்சீங்களா? இதுதான் விஷயமா?
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் முதல் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கான போஸ்டரை நடிகர் விஜய் வெளியிட்டிருக்கும் நிலையில் அதில் தங்கள் கட்சிக்கு விஜய் ஆதரவளித்து இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்
இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் முதன்முறையாக விஜய் நடிக்கும் 68வது படத்துக்கு தி கிரேட் டெஸ்ட் ஆப் ஆல் டைம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இதில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
GOAT: இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி தற்போது வரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் ஒன்று கூடியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விசில் போடு: இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான விசில் போடு தமிழ் புத்தாண்டை ஒட்டி வெளியாகிறது. விஜய்யின் குரலில் ஸ்டார்ட் மியூசிக் என்ற வார்த்தையோடு யுவன் சங்கர் ராஜாவின் பட்டையை கிளப்பும் இசையோடு இந்த பாடலின் இன்ட்ரோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த பாடல் தொடர்பான போஸ்டரை நடிகர் விஜய் தனது இன்ஸ்டாகிராம் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டார்.
மைக் சின்னம்: அதில் சூப்பர் என காட்டும் சைகை குறியீடோடு, மைக் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. இது தற்போது நாம் தமிழர் கட்சி போட்டியிடும் சின்னம் ஆகும். இதை அடுத்து விஜய் தனது பாடலின் குறியீடாக நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் மைக் சின்னத்தை வைத்துள்ளதாக கூறி சமூக வலைதளங்களை புரட்டி எடுத்து வருகின்றனர் நாம் தமிழர் கட்சியினர். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்து தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியின் பெயரையும் அறிவித்தார்.
கொந்தளிக்கும் ரசிகர்கள்: ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை சட்டமன்ற தேர்தலில் தான் போட்டி என அறிவித்திருந்த நிலையில் தற்போது எந்த கட்சிக்கும் ஆதரவில்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான் தற்போது நாம் தமிழர் கட்சியினர் விஜய்யின் போஸ்டரை பகிர்ந்து நாம் தமிழர் கட்சிக்குதான் விஜய் ஆதரவளித்திருக்கிறார் என கூறி வருகின்றனர். கடந்த தேர்தலில் வாக்களிக்க சென்ற சைக்கிளை வைத்து பல்வேறு யூகங்கள் கிளம்பிய நிலையில் தற்போது விஜய்யின் பாடல் போஸ்டரை வைத்து நாம் தமிழர் கட்சியினர் பேசி வருகின்றனர். இருந்த போதும் எதார்த்தமாக பாடலுக்காக வைத்த மைக்கை இப்படி எலக்சனுக்காக வைத்தது என எப்படி சொல்லலாம் என விஜய் ரசிகர்களும் கொந்தளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications