அண்ணாமலையிடம் விட்ட சவாலில்.. தோற்ற நாம் தமிழர்? சீமான் போட்ட சேலஞ்ச் தெரியுமா? முந்திய பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரியில் எல்லா தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்து உள்ளது. இந்த நிலையில் பாஜகவிற்கு அந்த கட்சி விட்ட சவால் ஒன்று கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனியாக போட்டியிட்டது. ஆனால் இந்த முறை நாம் தமிழர் சின்னம் மாறி புதிய சின்னத்தில் போட்டியிட்டது. 2024 லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது நாம் தமிழர் கட்சி. இது நாம் தமிழர் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

tamil nadu lok sabha election result 2024 Naam tamilar Party lok sabha election 2024 dmk bjp admk 2024 2024

2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரியில் எல்லா தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்து உள்ளது.

சின்னம் மாற்றம்; கரும்பு விவசாயி சின்னம் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியின் அடையாளமாக இருந்த சின்னம் ஆகும். கடந்த சட்டசபை தேர்தலை அந்த சின்னத்தின் கீழ்தான் நாம் தமிழர் கட்சி எதிர்கொண்டது. நாம், தமிழர் கட்சியின் நிரந்தர சின்னம் ஆகிவிடும் என்றெல்லாம் கட்சி நிர்வாகிகள் நினைத்தனர்.

ஆனால் அந்த சின்னத்தை லோக்சபா தேர்தலுக்கு முன் நாம் தமிழர் இழந்தது. போதுமான வாக்கு சதவிகிதம் இல்லை . தேர்தலுக்கு முன்பே சின்னத்தை கேட்கவில்லை. முதல் ஆளாக சின்னத்தை கேட்டு விண்ணப்பம் செய்யவில்லை என்பதே காரணம். இதை காலம் காலமாக இருக்கும் விதிகள். நாம் தமிழர் கட்சி இதை தவறவிட்டது பெரிய அளவில் அந்த கட்சிக்கு எதிராக மாறியது. இதையடுத்து கரும்பு விவசாயி சின்னம் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு கொடுக்கப்பட்டது.

அந்த சின்னத்தை பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தமிழகத்தில் 17 தொகுதிகளில் மனு தாக்கல் செய்தது. இதில் சில இடங்களில் அவர்களின் வேட்புமனு ஏற்கப்படவில்லை. கிட்டத்தட்ட 15 இடங்களில் அவர்கள் போட்டியிட, மற்ற இடங்களில் அந்த சின்னம் சுயேட்சை சின்னம் ஆனது.

சீமான் புகார்: இந்த சின்னத்தை பெற சீமான் உச்ச நீதிமன்றத்திற்கு எல்லாம் சென்று போராடினார். ஆனால் சின்னம் கிடைக்கவில்லை. ஏதாவது செய்து சின்னத்தை பெற படாதபாடு பட்டார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகதான் சின்னத்தை இழக்க காரணம் என்று சீமான் கூறினார்.

சின்னம் மாறி.. மைக் சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. அதே சமயம் கிரவுண்டில் அந்த கட்சிக்கு பெரிய அளவில் பூத் கமிட்டி இல்லை. இத்தனை காலமாக தனியாக போட்டியிட்டு கட்சியை நடத்தினாலும் அவர்களுக்கு தனியாக பூத் கமிட்டி பெரிதாக இல்லை.

இந்த நிலையில்தான் பாஜக தனியாக எடுக்கும் வாக்குகளை விட நாம் தமிழர் கட்சி அதிக வாக்கு சதவிகிதத்தை எடுக்கும். அப்படி எடுக்கவில்லை என்றால் கட்சியை கலைத்துவிடுவேன் என்று சீமான் சவால் விடும் அளவிற்கு நாம் தமிழர் கட்சி நம்பிக்கையாக இருந்தது.

தோல்வி: ஆனால் கணிப்புகள் நாம் தமிழருக்கு எதிராக வந்தன. இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரியில் எல்லா தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்து உள்ளது.

போட்டியிட்ட எல்லா இடங்களிலும் நாம் தமிழர் தோல்வி அடைந்து உள்ளது. ஆனால் 10 தொகுதிகளில் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகள், 6 தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகள், தஞ்சாவூரில் ஹுமாயூன் ஒன்றரை லட்சம் வாக்குகள், 20 தொகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள். 4 தொகுதிகளில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அசத்தி உள்ளது.

3வது இடம் பிடித்த நாம் தமிழர்: நாம் தமிழர் கட்சி பின்வரும் தொகுதிகளில் 3வது இடம் பிடித்தது.

கன்னியாகுமரி (அதிமுகவை பின்னுக்கு தள்ளி)
ஈரோடு (பாஜக கூட்டணி (தமாகா) வேட்பாளரை பின்னுக்கு தள்ளி)
கள்ளக்குறிச்சி (பாமகவை பின்னுக்கு தள்ளி)
நாகை (பாஜகவை பின்னுக்கு தள்ளி)
திருச்சி (அமமுகவை பின்னுக்கு தள்ளி)
புதுச்சேரி (அதிமுகவை பின்னுக்கு தள்ளி)

அதிகபட்ச வாக்குகள் - 1.63 லட்சம் (சிவகங்கை) தொகுதி.

வாக்கு சதவிகிதம் சவால்: இந்த நிலையில் பாஜகவிற்கு அந்த கட்சி விட்ட சவால் ஒன்று கவனம் பெற்றுள்ளது. பாஜக தனியாக எடுக்கும் வாக்குகளை விட நாம் தமிழர் கட்சி அதிக வாக்கு சதவிகிதத்தை எடுக்கும். அப்படி எடுக்கவில்லை என்றால் கட்சியை கலைத்துவிடுவேன் என்று சீமான் சவால் விடும் அளவிற்கு நாம் தமிழர் கட்சி நம்பிக்கையாக இருந்தது.

பாஜக கூட்டணி இந்த முறை 18 சதவிகிதம் வாக்குகளையும் பாஜக தனியாக 11.5 சதவிகிதம் வாக்குகளையும் வாங்கி உள்ளது. நாம் தமிழர் கட்சி 8.5 சதவிகிதம் வாக்குகளை பெற்றுள்ளது. இதன் மூலம் பாஜக நாம் தமிழரை முந்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+