கருகிய பிஞ்சு.. அந்த மிதுனை விட்டுடாதீங்க.. பள்ளி மாணவி தற்கொலையில் கொந்தளிக்கும் சீமான்

பள்ளி மாணவி தற்கொலைக்கு காரணமானோர் மீது நடவடிக்கை வேண்டும் என்கிறார் சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கோவையில் மாணவியின் மீதே பழிசுமத்தி அப்பிஞ்சை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, இளந்தளிர் கருகுவதற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும், ஆசிரியர் மிதுன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Recommended Video

    Coimbatore School Girl தற்கொலை ஏன்? | Chinmaya Vidyalaya | Oneindia Tamil

    கோவை மாவட்டம் கோட்டைமேடை சேர்ந்த 17 வயது மாணவி, ஆர்எஸ் புரத்தில் செயல்பட்டு வரும் சின்மயா வித்யாலயா பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஸ்கூலுக்கு போகமாட்டேன், அங்கே படிக்க விருப்பமில்லை என்று தன் வீட்டில் சொல்லி உள்ளதாக தெரிகிறது.

     பெற்றோர்

    பெற்றோர்

    இதனால் மாணவியின் பெற்றோரும், மகளின் விருப்பத்திற்கிணங்க மாற்றுச்சான்றிதழ் பெற்று, வேறு பள்ளியில் சேர்த்து விட்டனர்.. இந்த நிலையில் நேற்று முன்தினம், வீட்டில் தனியாக இருந்த மாணவி, திடீரென ஃபேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்... தற்கொலைக்கு முன்பாக அவர் ஒரு கடிதமும் எழுதி வைத்திருந்தார். அதில், "யாரையும் சும்மா விடக்கூடாது.. ரீத்தா ஓட தாத்தா, எலிசா சாரோட அப்பா, இந்த சார், யாரையும் விடக் கூடாது" என்று கைப்பட எழுதியிருந்தார்.

     கைது

    கைது

    அதாவது, சின்மயா பள்ளியில் படித்தபோது, இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி என்பவர், மாணவிக்கு பாலியல் தொல்லை தந்து வந்ததாக கூறப்படுகிறது.. இதனாலேயே அந்த பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு மாறியதாகவும், கடந்த 6 மாத காலமாக கடுமையான மன உளைச்சலில் மாணவி ஆளானதாகவும் அவரது நண்பர்கள் செய்தியாளர்களிடம் கண்ணீர் பேட்டியை தந்திருந்தனர்.

    கடிதம்

    கடிதம்

    மாணவியின் தற்கொலையும், அவரது கடிதமும், நண்பர்களின் பேட்டியும் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை கைது செய்தபோதிலும், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.. இந்த சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை இதுதான்:

    அறிக்கை

    அறிக்கை

    "கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி ஆசிரியர் கொடுத்தப் பாலியல் தொந்தரவினால் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப் போனேன். அண்மைக்காலமாக வெளிப்பட்டு வரும் கல்விக்கூடங்களில் நடைபெற்று வரும் பாலியல் கொடுமைகள் தொடர்பான செய்திகள் பெண் பிள்ளைகளின் நல்வாழ்வு, அவர்களது சமூகப் பாதுகாப்பு குறித்த பெருங்கவலையை ஏற்படுத்துகின்றன.

     மன உளைச்சல்

    மன உளைச்சல்

    மாணவியின் தற்கொலைக்குக் காரணமான கோவை சின்மயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டது சற்றே ஆறுதலைத் தந்தாலும், அக்கொடுங்கோலனைச் சட்டத்தின் பிடியிலிருந்தும், தண்டனையிலிருந்தும் தப்பிக்கவிடாது, இனி எவருக்கும் இத்தகைய எண்ணமே எழாதவாறு தடுக்கும் வகையில் மிகக் கடுமையான தண்டனை உறுதி செய்ய வேண்டுமெனவும், மாணவியின் மீதே பழிசுமத்தி அப்பிஞ்சை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, இளந்தளிர் கருகுவதற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+