Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1,000 பேர் ரூ1,000 கட்சி நிதி-சீமான் அறிவிச்சு ஆச்சு 8 வருஷம்.. சேர்ந்தது 209 பேரு.. 'சாட்டை' வேதனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்த கட்சி நிதி சேர்ப்பு திட்டத்துக்கு 8 ஆண்டுகளில் 209 பேர் மட்டுமே ஒத்துழைப்பு தந்துள்ளதாக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் வேதனை தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் பேசியதாவது: விஜயகாந்த் மறைந்த போது சமூக வலைதளங்களில் ஒரு செய்தி இடம் பெற்றது. ஒரு நல்லவரை இழந்துவிட்டோம்.. ஒரு நல்லவரை இழந்துவிட்டோம் என்பதுதான் அது.

Naam Tamilar Sattai Duraimurugan urges fund for Party from Cadres


அதே செய்திக்கு கீழே கமெண்ட்டாகப் போடப்பட்டிருந்தது 'ஒரு நல்லவரை இழந்துவிட்டோம்.. இன்னொரு நல்லவரை இழந்துவிடக் கூடாது' என்பது. அப்படி எழுதியவர்கள் யாரும் நாம் தமிழர் கட்சி கிடையாது. தனிப்பட்ட முறையில் மட்டுமே நேர்மையாளர் விஜயகாந்த். ஆனால் கொள்கையில், கோட்பாட்டில், சித்தாந்தத்தில், அரசியலில் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் சீமான். அவரை இழந்துவிடக் கூடாது என்றுதான் ஒவ்வொருத்தனும் பதிவு செய்தான்.

வளர்ந்துவிட்டது நாம் தமிழர் கட்சி: நாம் தமிழர் கட்சி வளர்ந்திருக்கிறது. நாம் தமிழர் கட்சி எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது எனில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்துக்கு போகும் போது, 8-வது வகுப்பு சிறுவன் ஒரு பேருந்தில் இருந்து கையை நீட்டி அண்ணே அடுத்து நாமதாண்ணே என சொல்லும் அளவுக்கு நாம் தமிழர் கட்சி வளர்ந்திருக்கிறது. இளைய தலைமுறையிடம் போய் சேர்ந்துவிட்டது.

8 வருஷத்தில் 209 பேர்தான்.. : கட்சியில் மிக முக்கியமான பங்கு வகிப்பது பொருளாதாரம். 2015-ம் ஆண்டு பொதுக்குழு என நினைக்கிறேன். இதே சென்னையில் சீமான் சொன்னார்.. 1,000 பேர் ரூ1,000 திட்டம்.சொல்லி கிட்டத்தட்ட 8 வருஷம் ஆச்சு. 1,000 பேர் ரூ1,000 திட்டத்தில் இதுவரை எத்தனை பேர் சேர்ந்துள்ளார்கள் தெரியுமா? இதுவரைக்கும் 209 பேர்தான் சேர்ந்துள்ளனர். 8 வருஷத்தில.. நான் மாதம் மாதம் ரூ2,000 தருகிறேன்.

முதலில் வருமானம்.. : 1,000 பேர் கூட நாம் தமிழர் கட்சிக்கு மாதம் ரூ1,000 தர முடியாதா? முடியும். ஆனால் செய்யலை.. ரூ1,000 திட்டத்தில் 1,000 பேரும் இடம்பெறுவதுதான் முதல் வெற்றி. ஒரு கட்சிக்கு மாதம் ரூ10 லட்சம் கூட வருமானம் வரவில்லை எனில்.. 1,000 பேர் ரூ1,000 திட்டம் நம்மிடம் இருந்தால் நாம் யாரிடமும் கை நீட்ட வேண்ட தேவை இல்லை. நாம வெல்லப் போறோம்.. கோட்டையை பிடிக்கப் போறோம்.. அதெல்லாம் அடுத்த கட்டம். முதலில் கட்சிக்கான வருமானத்தை இந்த 1,000 பேர் ரூ1,000 திட்டத்தின் மூலம் கொண்டு வாங்க.. அதைச் சொல்லத்தான் நான் பொதுக்குழுவுக்கே வந்தேன். நன்றி வணக்கம். இவ்வாறு சாட்டை துரைமுருகன் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+