ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு திமிர்த்தனமானது: சீமான் கடும் ஆவேசம்
சென்னை: ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்துக்கு வெளிநாட்டு நிதி உதவி கிடைத்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது திர்மித்தனமானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னையில் இன்று சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்டி வரிமுறையை மத்திய அரசு நீக்கியே ஆக வேண்டும். பாகுபாடு இல்லாமல் குடிநீர், சுகாதாரம், மருத்துவம் வழங்குவதுதான் அரசாங்கத்தின் கடமை.

நாடு முழுவதும் மீண்டும் மீண்டும் சுங்க கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. சுங்க கட்டணங்கள் செலுத்தி பொதுமக்களால் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை கலாஷேத்ராவில் உண்மை எதுவும் இல்லாமல் மாணவர்கள் போராட்டம் நடத்தி இருக்க வாய்ப்பில்லை. கலாஷேத்ரா தொடர்பாக நேர்மையாக, நீதியான விசாரணை நடத்த வேண்டும். கலாஷேத்ரா பிரச்சனையில் குற்றவாளிகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தமிழருக்காக குரல் கொடுக்கிறோம் நாங்கள். எங்களை நீங்கள் பாசிஸ்ட் என அழைத்தால் ஆம் நாங்கள் பாசிஸ்ட்தான். இதனையே திரும்ப திரும்ப சொல்வோம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் போராடிய மக்களுக்கு வெளிநாட்டு பண உதவி கிடைத்தது என்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இது திமிர்த்தனமான பேச்சு. இத்தகைய பேச்சுகளுக்கு சரியான பாடம் கிடைக்கும். இவ்வாறு சீமான் கூறினார்.

முன்னதாக சீமான் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஆணவத்திலும், அகம்பாவத்திலும் எதுவுமே தெரியாது, அரைவேக்காட்டுத்தனமாக உளறலாமா? போராட்டத்தில் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆட்பட்ட மக்களைப் பணத்தை வாங்கிக் கொண்டு போராடியதாகக் கூறி அவதூறு சேற்றை வாரியிறைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, 40க்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் காவுவாங்கியும் இணையச் சூதாட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் இருப்பதற்குக் காரணமென்ன? ஆளுநரது மொழி நடையில், அதற்கும் பணம்தான் காரணமென எடுத்துக் கொள்ளலாமா? பணத்திற்காகக் கங்காணி வேலைசெய்வதும், அதிகார வர்க்கத்தின் ஏவல் பிரிவாகச் செயல்பட்டு, சனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பது ஆளுநருக்கு வேண்டுமானால் கைவந்த கலையாக இருக்கலாம்; இனமானத் தமிழர்களுக்கு இல்லை! தமிழர்களின் வரிப்பணம் தரும் வருவாயில் உண்டுக் கொளுத்துவிட்டு, தமிழர்களை இழித்துரைத்துப் பேசுவது ஒருபோதும் ஏற்புடையதல்ல. பெரும் பெரும் ஆட்சியாளர்களையே அடக்கி ஒடுக்கி, அடிபணிய வைத்த தமிழ் மண்ணிது. இந்தியப் பெருநாட்டிற்கே அரசியல் திசைவழிக் காட்டும் பெருமிதமிக்க தமிழர் நிலமிது. ஆகவே, தமிழர்களை சீண்டிப் பார்க்கும் வேலையை, இத்தோடு ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக் கொள்ள வேண்டுமென அன்போடு அறிவுறுத்துகிறேன். இல்லாவிட்டால், தமிழ் மக்கள் தகுந்தப் பாடம் புகட்டுவார்கள் என எச்சரிக்கிறேன் என கூறியிருந்தார் சீமான்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications