சீமான் உள்பட நாம் தமிழர் நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் திடீர் முடக்கம்! என்ன காரணம்?
சென்னை: நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அக்கட்சியின் நிர்வாகிகளின் ட்விட்டர் பக்கங்கள் ஒரே நேரத்தில் மொத்தமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வளர்க்கும் பணியில் அவர் தீவிரமாக இறங்கி உள்ளார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள திராவிட கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என உறுதியாக தெரிவித்து வரும் சீமான் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் தான் இன்று திடீரென்று சீமானின் ட்விட்டர் பக்கம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. @SeemanOfficial என்ற அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பக்கத்தில், ‛‛சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாம் தமிழர் கட்சியின் பிற நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்தி, பாக்கியராஜன், விக்கி பார்கவ் உள்பட மேலும் சில நிர்வாகிகளின் ட்விட்டர் பக்கங்களும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் ட்விட்டர் பக்கங்களிலும் கூட, ‛‛சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது'' என்றே வருகிறது.

இதன்மூலம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் உள்பட முக்கிய நிர்வாகிகளின் ட்விட்டர் பக்கங்கள் ஒரே நேரத்தில் மொத்தமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இருப்பினும் முடக்கத்தின் பின்னணியில் உள்ள காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. இதனால் நாம் தமிழர் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications