ரஜினி ஆடியோ லான்ச் நடத்தலாம்.. என் தம்பி விஜய் லியோவுக்கு நடத்த கூடாதா? அரசியல் பிரஷர்! சீமான் பளீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக பெரிய நெருக்கடி கொடுக்கப்படுகிறது, அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என தெரிந்தே விஜய்க்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. லியோ இசை வெளியீட்டு விழா ரத்துக்கு அரசியலே காரணம் என்று சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டு உள்ளது. நேரு அரங்கில் நடக்க இருந்த விழா அதிக டிக்கெட் விற்பனை, போலி டிக்கெட் விற்பனை உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Naam Tamilar Seeman condemns Tamil Nadu government against Vijays Leo Audio Launch

அதே சமயம் அவரின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு அரசியல் ரீதியாகவே அனுமதி கொடுக்கவில்லை. திமுக அரசுதான் இதை செய்கிறது என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதற்காக #DMKFearsThalapathyVIJAY என்ற டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சீமான் பேட்டி: இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார். அதில்,. விஜய் படத்திற்கு பாடல் வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கேட்டுள்ளார். ஆனால் அனுமதி கொடுக்கவில்லை. இத்தனை காலம் அவரின் நிகழ்ச்சி அனுமதி கிடைத்தது. முந்தைய இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அனுமதி கிடைத்தது. ஆனால் இந்த முறை ஏன் அனுமதி கிடைக்கவில்லை. என்ன காரணத்திற்காக கிடைக்கவில்லை.

காவல்துறை முன் ஆய்வு செய்து அனுமதி கொடுத்து இருக்கலாமே. கேட்டால் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியை காரணம் காட்டுகிறார்கள். அவரின் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெருக்கடியை காரணம் காட்டுகிறார்கள்.

இதெல்லாம் நம்பும் விதமாகவே உள்ளது. எதுவும் நம்பும்படியாக இல்லை. கண்டிப்பாக அவரின் நிகழ்ச்சிக்கு அரசியல் அழுத்தம் உள்ளது. பொதுவாக அரசியல் நிகழ்ச்சிகளில் அதிக கூட்டம் கூடும் என்பதால் வேறு இடத்தை கொடுப்பார்கள். அது போல மாற்று இடம் கொடுத்து இருக்கலாம்.

அரசியல்தான் காரணம்: அரசியல் கூட்டங்களில் அப்படித்தானே செய்வார்கள். அல்லது பாதுகாப்பு கொடுத்து இருக்கலாம். நீங்கள் நடத்துங்கள் நாங்கள் பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று கொடுத்து இருக்கலாம். அதற்குத்தான் அரசு இருக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவே அரசு.

நடத்தவே நடத்த வேண்டாம் என்றால் ஏன் அரசு. நீ உள்ளேயே இரு.. வெளியே வந்தால் ஆபத்து.. செத்து போயிடுவ என்று சொல்வதற்கு போலீஸ் எதற்கு.. அரசு எதற்கு? நீ வெளியே வா.. உனக்கு பாதுகாப்பு தருகிறேன் என்று சொல்வதே அரசு. அதுவே காவல்துறை.

நேரு உள்ளரங்கில் அழகாக பாதுகாப்பு போடலாமே. நீங்கள் அரசியல் மீட்டிங்கில் பல ஆயிரம் பேரை அழைக்கிறீர்கள். அப்போது பிரச்சனை இல்லையா? அப்போது பாதுகாப்பு பிரச்சனை இல்லை என்றால் இப்போது எங்கிருந்து வந்தது. ஏன் விஜய்யை இப்படி செய்கிறீர்கள். ஏன் என் தம்பிக்கு நெருக்கடி கொடுக்கிறீர்கள்.

Naam Tamilar Seeman condemns Tamil Nadu government against Vijays Leo Audio Launch

பின்னணி என்ன: இதில் உள்நோக்கம் உள்ளது. அரசியல் உள்நோக்கம் உள்ளது. இதற்கு முன் விஜய் படங்களுக்கு பாடல் வெளியீட்டு விழாவில் பிரச்சனை வரவில்லையே. இப்போது மட்டும் ஏன் இந்த பிரச்சனை. இப்போது மட்டும் ஏன் அனுமதி கொடுக்கவில்லை.

எனக்கு இது சரியாக படவில்லையே. ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கு பாடல் வெளியீட்டு விழா நடந்ததே. அதற்கு எப்படி அனுமதி கொடுத்தீர்கள். அதற்கு எப்படி பாதுகாப்பு கொடுத்தீர்கள். அங்கே பாதுகாப்பு பிரச்சனை இல்லையா? அப்போது பிரச்சனை இல்லையா? அப்போது பாதுகாப்பு பிரச்சனை இல்லை. ஏன் விஜய்யை இப்படி செய்கிறீர்கள்.

ரஜினிக்கு ஒரு நியாயம் விஜய்க்கு ஒரு நியாயமா? உரிய பாதுகாப்பு கொடுக்கவே காவல்துறை உள்ளது. நீங்கள் நடத்தவே கூடாது என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும். நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக பெரிய நெருக்கடி கொடுக்கப்படுகிறது, அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என தெரிந்தே விஜய்க்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது , லியோ இசை வெளியீட்டு விழா ரத்துக்கு அரசியலே காரணம் என்று சீமான் விமர்சனம் செய்துள்ளார்., என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+