மன்னிப்பு கேட்க சொன்னால்.. முழுக்க முழுக்க வன்மம்தான்.. விஜயலட்சுமி வழக்கு.. சீமான் பெரிய சிக்கல்!
சென்னை: சீமான் - விஜயலட்சுமி வழக்கில் இருவரும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
இல்லையென்றால் இருவரையும் நீதிமன்றத்திற்கு நேரில் வர வைக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கில் இன்று வாதம் வைத்த விஜயலட்சுமி, சீமான் தற்போதும் வெளியில் தன்னை குறித்து தவறாக பேசிவருகிறார். மன்னிப்பு கோரி தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தை படித்தால் அவரது வன்மம் தெரியும், அந்த பிரமாண பத்திரம் மன்னிப்பு கேட்கும் வகையில் இல்லை , என்று கூறி உள்ளார்.

சீமான் - விஜயலட்சுமி வழக்கு கடந்து வந்த பாதை
முன்னதாக கடந்த வாரம் வழக்கு விசாரணையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் அவரை கைது செய்ய தற்போது விதிக்கப்பட்டு உள்ள தடை நீக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் காட்டமாக கூறி உள்ளது. அடுத்த விசாரணைக்கு முன் சீமான் தனிப்பட்ட வகையில் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு நீக்கப்படும். இல்லையென்றால் சீமான் கைதாகும் வாய்ப்புகள் உள்ளன.
திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதி அளித்து, தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சீமான் ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி முன்பு குற்றம் சாட்டியிருந்தார். அவரது புகாரின் அடிப்படையில், பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
சீமான் விஜயலட்சுமி வழக்கு
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சீமான் செப்டம்பர் 24-க்குள் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. விஜயலட்சுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சல், அவரிடம் கொடுத்த வாக்குறுதிகள், அதன்பின் அவரை பற்றி பொதுவெளியில் தவறாக பேசியதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
அவர் மன்னிப்பு கேட்கத் தவறினால், அவரது கைதுக்கான தற்போதைய தடை நீக்கப்பட்டு, அவர் எந்தப் பாதுகாப்பும் இன்றி விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று நீதிமன்றம் எச்சரித்தது.
கைது செய்ய தடை இல்லை
அதாவது சீமானை கைது செய்ய உள்ள தடை நீக்கப்படும், அவர் கைது செய்ய அனுமதிக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்தது. மேலும், இந்த விவகாரத்தை சுமூகமாகத் தீர்க்க இரு தரப்பினருக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. சட்டச் செயல்முறைக்கு விஜயலட்சுமி உரிய உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் நடிகையைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சீமான் நீதிமன்றத்திற்கு உறுதியளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.
தவறாக பேச கூடாது
எதிர்காலத்தில் அந்த நடிகையை பற்றி தவறாக பேச கூடாது. இரு தரப்பினரும் தங்கள் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும். சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சீமான் மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் நடிகை வழக்கை வாபஸ் வாங்கலாம் என்றும் இது நீதிக்கும் மரியாதைக்கும் உகந்த சமரசம் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.
சீமான் மீதான கைதுக்கான , விசாரணைக்கான இடைக்கால தடை அடுத்த விசாரணை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கு செப்டம்பர் 24-க்கு ஒத்திவைக்கப்பட்டு, அன்று சீமானின் பதிலையும், அடுத்தகட்ட நடவடிக்கையையும் நீதிமன்றம் பரிசீலிக்கும். தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரவலான கவனத்தை ஈர்த்த நீண்டகால சர்ச்சையில் இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.
அடுத்த விசாரணைக்கு முன் சீமான் தனிப்பட்ட வகையில் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு நீக்கப்படும். இல்லையென்றால் சீமான் கைதாகும் வாய்ப்புகள் உள்ளன. இந்த வழக்கு வாபஸ் ஆகும் பட்சத்தில் சீமான் விஜயலட்சுமியிடம் தனிப்பட்ட வகையில் மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்று பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications