முத்துராமலிங்க தேவர் சொன்னதால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கட்டை விரலை ”வெட்டி” வீசி புரட்சி.. சீமான்
சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சொன்னதால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது கட்டை விரலை வெட்டி வீசினார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உழைக்கின்ற கை தாழ்ந்தது, உண்கிற கைதான் உயர்ந்தது என்கின்ற எண்ணம் எவருக்கும் இருக்கக்கூடாது. தெய்வத்திற்கு முன்பு இரு கைகளையும் இணைத்துதான் நாம் வழிபடுகிறோம். எனவே, 'பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கின்ற இந்த சாதிய பாகுபாடு கூடவே கூடாது' என்று போதித்த சமத்துவ நாயகர் ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் தோன்றிய திருநாள் இன்று! அடிமை வாழ்வினைவிட விடுதலைச்சாவு மேலானது; விடுதலை அல்லது வீரமரணம் என முடிவெடுத்து, தம் இளம் வயதிலேயே களம் கண்ட மானத்தமிழர். கைரேகை சட்டத்தைப்போட்டு ஆங்கிலேய ஆட்சியாளர்கள் நம்முடைய விடுதலை வேட்கையைத் தணித்துவிடலாம் என்று எண்ணியபோது, அந்தக் கைரேகை சட்டத்தை எதிர்த்துப்போராடி தகர்த்த புரட்சியாளர்.

கட்டை விரல் வெட்டிய புரட்சி: தினமும் காலையிலும், மாலையிலும் கர்ப்பிணிப் பெண்கள், வயது முதிர்ந்தவர்கள், உழைக்கும் மக்கள், திருமணமானவர்களெல்லாம் சென்று கைரேகை வைக்க வேண்டும் என்ற இழிநிலையைச் சுமப்பதற்குப் பதிலாகக் கட்டைவிரலை வெட்டி எறியலாம் என்ற ஒற்றை வார்த்தைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் கட்டைவிரலை வெட்டி வீசினார்கள் என்றால், ஐயாவின் வார்த்தையே வாழ்க்கை என்று வாழ்ந்த அத்தகைய மானமறவர்களை தாயக விடுதலைக்குத் தந்த தன்னிகரற்ற தலைவன் நம்முடைய ஐயா தெய்வத்திருமகனார் அவர்கள். தமிழர்கள் எங்களை வீழ்த்தியது, தமிழருக்குள்ளே இருக்கிற வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம், பதவிவெறி, பணத்தாசைதானே ஒழிய, வீரமோ -ஆயுதமோ இல்லை என்று அன்றே உணர்ந்து, உணர்த்திய பெருந்தமிழர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள்.
விடுதலைப் போராளி: எனக்கு பாய்தான் தெரியும், பஞ்சு மெத்தை தெரியாது; பதுங்கத் தெரியும், பயம் கொள்ளத் தெரியாது; விவசாயம் தெரியும், வியாபாரம் தெரியாது' என்று வாழ்ந்த எளிய மகன். 'தேசமே எனது உடல், தெய்வீகமே எனது உயிரென வாழ்ந்த தீரமிக்க விடுதலைப் போராளி. 100 ஏழைகள் கூடி ஒரு பணக்காரரை உருவாக்குகிறார்கள், ஒரு பணக்காரன், ஆயிரம் ஏழைகளை உருவாக்குகிறான்' என்று போதித்த பாட்டாளி வர்க்கத்தினுடைய பங்காளி!
காலஞானி: 'பாலை போத்தலில் அடைத்து இன்று விற்பதைப் போல நாளை தண்ணீரையும் அடைத்து விற்பார்கள்; விளைநிலங்களை எல்லாம் வீட்டுமனைகளாக்கி விற்பனை செய்வார்கள்; புறாக்கள் கூடுகட்டி வாழ்வது போல ஒரு நாள் மக்கள் வீடு கட்டி வாழ்வார்கள்' என்று இன்று நடக்கின்ற இப்பேரவலங்களையெல்லாம் அன்றே கணித்த காலஞானி!
வீரத் தமிழ் மகன்: 'உண்மையைச் சொல், நீ உரக்கச்சொல், உறுதியாகச் சொல், இறுதிவரை சொல், நீ தான் சிறந்த தமிழ் மகன்' என்று கற்பித்த பெருந்தகை. 'மலர்மாலைக்கு ஒருவன் கழுத்தை நீட்டுவதைப்போல, மரணக் கயிற்றுக்கு எவன் கழுத்தை நீட்டுகிறானோ, அவன்தான் வீரன்!' என்று எங்களைப் போன்ற தமிழிளம் தலைமுறையினருக்கு உணர்வூட்டிய வீரத்தமிழ்மகன் நம்முடைய ஐயா முத்துராமலிங்கத்தேவர் அவர்களினுடைய நினைவைப் போற்றுகின்ற இந்நாளில், அவர் காட்டிய வழியைப்பற்றி நடக்கும் தமிழிளம் தலைமுறையினராகிய நாம், அடிமை தமிழ்ச்சமூகத்தின் உரிமை மீட்சிக்கும், அதன் எதிர்காலப் பாதுகாப்பான நல்வாழ்விற்கும் இறுதிவரை உறுதியாகப் போராடுவோம் என்கிற உறுதியை ஏற்போம்! மதிப்புமிக்க நமது ஐயா தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்! இவ்வாறு சீமான் கூறினார்.
தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் புகழ் வணக்கம்!
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) October 30, 2023
உழைக்கின்ற கை தாழ்ந்தது, உண்கிற கைதான் உயர்ந்தது என்கின்ற எண்ணம் எவருக்கும் இருக்கக்கூடாது. தெய்வத்திற்கு முன்பு இரு கைகளையும் இணைத்துதான் நாம் வழிபடுகிறோம். எனவே, ‘பிறப்பின் அடிப்படையில் பேதம்… pic.twitter.com/DL0a2m3DXQ
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications