சின்மயி வைக்கும் குற்றச்சாட்டுகள் சந்தேகம் வரவைக்கிறது.. சீமான் கருத்து
கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி வைக்கும் குற்றச்சாட்டுகள் சந்தேகம் வர வைக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி வைக்கும் குற்றச்சாட்டுகள் சந்தேகம் வர வைக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குற்றங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இதில் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இதில் நிறைய குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

சில பிரபலங்கள் குறித்து வரும் பாலியல் புகார்களை பதிவிட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன் கவிஞர் வைரமுத்து குறித்தும், சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பாலியல் குற்றச்சாட்டை வைத்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த புகார்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார். நேற்று அவர் அளித்த பேட்டியில் வைரமுத்துவிற்கு அவர் ஆதரவாக பேசி இருந்தார்.
இதையடுத்து இன்று அவர் அளித்த பேட்டியில், சின்மயி இந்த குற்றச்சாட்டுகளை இத்தனை வருடமாக ஏன் மறைத்தார். பிரபலமான நபர்களை தாக்கி பேச வேண்டும் என்பது இப்போது வழக்கமாகி உள்ளது.
வைரமுத்து ஒருவேளை தவறு செய்திருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். சட்டப்படி புகார் கொடுக்கலாம். இவ்வளவு வழி இருக்கையில் அதை டிவிட்டரில் சென்று எழுதுவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது. இது பெரிய சந்தேகம் வர வைக்கிறது.
வைரமுத்துவிற்கு களங்கம் ஏற்படுத்தவே இப்படி செய்கிறார்கள். ஏன் அரசியல்வாதிகள் மீது கூடதான் பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு இருக்கிறது. சின்மயி புகார் சந்தேகம் வரவைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications