தலித்துகளின் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இப்போது எங்கே? இனி போராட்டம்- சீமான் திடீர் அறிவிப்பு
சென்னை: சென்னை மாகாணத்தில் தலித்துகளுக்கு ஆங்கிலேயர் ஆட்சியில் தரப்பட்ட 12 லட்சம் பஞ்சமி நிலங்கள் எங்கே என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பஞ்சமி நிலங்களை மீட்டு ஆதித்தமிழ்க்குடி மக்களிடம் அளிக்கும் போராட்டத்தை விரைவில் நாம் தமிழர் கட்சி தொடங்கும் எனவும் சீமான் அறிவித்துள்ளார்.
பஞ்சமி நிலம் அல்லது Depressed Class Land என்பது நிலமற்ற ஏழை தலித்துகளுக்காக 1892ம் ஆண்டில் ஆங்கிலேய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வேளாண் விளைநிலங்கள். தலித்துகளின் பொருளாதார மேம்பாட்டுக்காக ஆராய்ந்து ஆங்கிலேயர் அரசாங்கம் மேற்கொண்ட மிக முக்கியமான நடவடிக்கை இது.

பஞ்சமி நிலமும் சட்டமும்
ஆங்கிலேயர் ஆட்சியில் வருவாய்த்துறை பதிவு ஏடுகளில் பஞ்சமி நிலம் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய பஞ்சமி நிலங்களை தலித்துகளைத் தவிர இதர சமூகத்தினர் வாங்க முடியாது; அப்படியே வாங்கி இருந்தாலும் அது செல்லாது என்கிறது சட்டம். சென்னை மாகாணம் முழுவதும் அதாவது இன்றைய தமிழகம் முழுவதும் இப்படி பஞ்சமி நிலங்கள், பல லட்சம் ஏக்கர் தலித்துகளுக்கு வழங்கப்பட்டன. ஆனால் இன்றைக்கு பஞ்சமி நிலம் என்பதே இல்லை என்கிற நிலைமைதான் உள்ளது. பெரும்பான்மை பஞ்சமி நிலங்கள் கைமாறப்பட்டுள்ளன.

பஞ்சமி நில மீட்பு இயக்கம்
1994-ம் ஆண்டு பஞ்சமி நில மீட்பு இயக்கம் தலித் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டன. காரணை பஞ்சமி நில மீட்பு போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்ட துயரமும் நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து பஞ்சமி நில விற்பனை குறித்து விசாரிக்க தமிழக அரசு 2011-ல் முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மருதமுத்து தலைமையில் விசாரணை குழு அமைத்தது. 2015-ம் ஆண்டு தமிழக அரசு மேலும் ஒரு குழுவையும் அமைத்தது.

12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம்
இந்த நிலையில்தான் பஞ்சமி நில மீட்பு இயக்கத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அன்றைய சென்னை மாகாணத்தில் வாழ்ந்த ஆதித்தமிழ்க்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட 12 இலட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இப்போது எங்கே? 55 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் சமூகநீதி ஆட்சிக்காலத்தில்தான் பெருமளவு பஞ்சமி நிலங்கள் ஆதித்தமிழ்க்குடி மக்களை ஏமாற்றி முறைகேடாக அபகரிக்கப்பட்ட நிலையில் அவற்றை மீட்க தமிழ்நாடு அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? மீட்டுக்கொடுத்த நிலங்கள் எவ்வளவு? பஞ்சமி நிலங்களை மீட்பதற்காக தமிழ்நாடு அரசு அமைத்த குழுக்கள் என்னவானது?

போராட்டம்
பஞ்சமி நிலங்கள் மீட்பது தொடர்பாக ஏற்கனவே ஆண்டவர்களும், இப்போது ஆள்பவர்களும், அவர்களுக்குத் துணை நிற்பவர்களும் என யாருமே வாய் திறக்க மறுப்பது ஏன்? பஞ்சமி நிலங்களை மீட்டு ஆதித்தமிழ்க்குடி மக்களிடம் அளிக்கும் போராட்டத்தை விரைவில் நாம் தமிழர் கட்சி தொடங்கும் . இவ்வாறு சீமான் தெரிவித்து
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications