இதுதான் சீமான்.. பேச்செல்லாம் இல்லை நேரா ஆக்சன்தான்.. ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்.. தரமான பிளான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்காக 234 தொகுதிகளுக்கு ஒரே நாளில் இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. நாம் தமிழர் கட்சியின் இந்த வேகம்.. மற்ற கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Recommended Video

    #TNElection2021 சென்னை: 234 வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம்: சீமான் அதிரடி அறிக்கை!

    2021 தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக, அதிமுக உள்ளிட்ட முன்னணி கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. ஆனால் இரண்டு மூத்த கட்சியும் இன்னும் முழுமையாக கூட்டணி பேச்சுவார்த்தையை முடிக்கவில்லை. அதிமுக இன்னும் தேமுதிகவுடன் பேசி வருகிறது.

    இன்னொரு பக்கம் திமுக இன்னும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உட்பட சில கட்சிகளிடம் பேசி வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தையில் இரண்டு கட்சிகளும் பெரிய இழுப்பறியை சந்தித்தன.

    இழுபறி

    இழுபறி

    இதனால் இரண்டு கட்சிகளும் இன்னும் முழுமையாக வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. அதிமுக 6 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை மட்டுமே வெளியிட்டுள்ளது. திமுக 10ம் தேதிதான் பட்டியலை வெளியிடுகிறது. மூத்த கட்சிகள் இப்படி திணறிக்கொண்டு இருக்கும் போது நாம் தமிழர் கட்சி இன்னொரு பக்கம் ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. மற்ற கட்சிகளை விட நாம் தமிழர் வேகமாக செயல்பட்டு வருகிறது.

    வேகம்

    வேகம்

    அதன்படி தமிழக சட்டசபை தேர்தலுக்காக 234 தொகுதிகளுக்கு ஒரே நாளில் இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. ஒரே மேடையில் 234 வேட்பாளர்களையும் இன்று அறிவிக்கிறார் சீமான். ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பு செயயப்படுகிறது.

     அதிரடி

    அதிரடி

    அதிலும் லோக்சபா தேர்தல் போலவே இதில் 50% பெண் வேட்பாளர்களை சீமான் களமிறக்க இருக்கிறார். 117 ஆண் வேட்பாளர்கள் ,117 பெண் வேட்பாளர்கள் நாம் தமிழர் சார்பாக சீமான் களமிறக்க உள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட உள்ள தொகுதியும் இன்று அறிவிக்கப்படும்.

    பிளான்

    பிளான்

    ஏற்கனவே சில வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மீதம் உள்ளவர்களையும் அதிகாரபூர்வமாக அறிவித்து ஒன்றாக அவர்களை மேடை ஏற்றும் முடிவில் சீமான் இருக்கிறார். இதையடுத்து நாளை காலையில் இருந்து நாம் தமிழர் கட்சி தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ளும். மற்ற கட்சிகளுக்கு முன்பாக நாம் தமிழர் தீவிரமாக களமிறங்கி தேர்தலை சந்திக்க உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+