மூடிய மதுக்கடைகள் மூடியதாகவே இருக்கட்டும்- மதுவிலக்கை அமல்படுத்த நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்
சென்னை: கொரோனாவை தடுக்க லாக்டவுனை முன்னிட்டு மூடப்பட்ட மதுக்கடைகளை அப்படியே மூடிவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கொரோனாவை தடுப்பதற்காக நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 3-ந் தேதி வரை 40 நாட்கள் லாக்டவுன் அமலில் இருக்கிறது.

லாக்டவுனை முன்னிட்டு தமிழகத்திலும் மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் மிக நீண்டகாலம் மதுபானக் கடைகள் இப்போதுதான் மூடப்பட்டுள்ளன.
மதுக்கடைகள் மூடப்பட்டதால் கள்ளச் சாராய சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தங்களது ட்விட்டர் பக்கத்தில், 50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் தீய ஆட்சி முறைமைகளால் குடிநோயாளிகளின் மாநிலமாக தமிழ்நாடே மாறியிருக்கிறது. மக்களின் நலன் காக்க வேண்டிய மாநில அரசே மதுபானக் கடைகளைத் திறந்து மக்களைக் குடிகாரர்களாக்கி வருகிற பேரவலம் தொடர்ச்சியாக இந்த மண்ணில் நடந்து வருகிறது. ஆகையால் மதுபான கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
மேலும் துவிலக்கு என்பதைத் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்து அதிகாரத்திற்கு வந்த அதிமுக அதனைச் செயற்படுத்தத் துரும்பையும் கிள்ளிப் போடாதிருப்பது மிகப்பெரும் மோசடித்தனம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications