வந்தேறியா? அப்படி என்ன சொல்லிட்டாரு மதன் கவுரி.. மொத்தமாக அட்டாக் செய்யும் நாம் தமிழர் கட்சியினர்
சென்னை: வந்தேறி என்று சொல்லி இனரீதியாக பிரிப்பதற்கு எதிராக பேசிய மதன் கவுரியையே வந்தேறி என்று சாடி வருகிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அண்மையில் பேசிய பிரபல யூடியூபர் மதன் கவுரி, "நான் ஒரு விசயத்தை தெரியாமல் கேட்கிறேன். தமிழ்நாட்டில் இருக்கும் நிறைய பேர் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள். ஆந்திராவில் இருக்கும் நிறைய பேர் கர்நாடகாவில் இருந்து போனவர்கள் என்பது தெரியுமா? பஞ்சாபில் இருக்கும் முக்கால்வாசி பேர் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள்.

பாகிஸ்தானில் இருக்கும் எல்லோருமே இந்தியாவில் இருந்து போனவர்கள். இப்படி பிரித்து எந்த இடத்தில் இவன் வந்தேறி என்று சொல்ல ஆரம்பிக்கிறீர்கள். மணிப்பூரில் இருக்கும் பெரிய பிரச்சனையே மெய்தி இன மக்கள் குகி இன மக்களை வந்தேறி என்றும், அவனுக்கு நீ அனுமதி அளிக்கக்கூடாது, அவனுக்கு உரிமை கொடுக்கக்கூடாது, அவனுக்கு இடஒதுக்கீடு தரக்கூடாது, அதையும் மீறி கொடுத்தால் எனக்குதான் தர வேண்டும் என்கிறார்கள்.
ஒரு விசயத்தை நான் தெளிவாக கேட்கிறேன். எப்படி நாம் வந்தேறி என்று சொல்ல முடியும். நமது கதை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். 3 தலைமுறை அல்லது 4 தலைமுறை பின்னால் சென்றால் தெரியும். அஅதற்கும் பின்னால் சென்றால் 10 தலைமுறை வரை தெரியும். அதற்கு முன் எல்லோருக்கும் எங்கிருந்து வந்தோம். ஆப்பிரிக்காவில் இருந்து வந்தோம். அப்படியென்றால் நாம் எல்லோருமே ஒரு விதத்தில் வந்தேறிதானே.
சென்னையில் இருந்து கிளம்பி சென்ற கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபர் ஆனால் நமக்கு ஜாலியாக இருக்கிறது. மதுரையில் இருந்து கிளம்பி சென்ற சுந்தர் பிச்சை கூகுளின் தலைவரானால் நமக்கு பெருமையாக இருக்கும். ஆனால், நமது ஊரில் ஒன்னொருத்தனுக்கு ஒரு சீட் கிடைத்தால் கூட கோபம் வரும் என்றால் என்ன மாதிரியான லாஜிக் இது.
பக்கத்துக்கு நாட்டிற்குபோய் மாஸ் செய்கிறோம் என்ற பெருமையும் வேண்டும். ஆனால், நமதூருக்குள் யாரும் வந்துவிடக்கூடாது என்பது பிரச்சனையாக இருக்கிறது அல்லவா. இந்த வீடியோவை 170 நாடுகளில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நாடுகளில் தமிழ்நாட்டில் இருந்து சென்றவர்கள்தான் உள்ளவர்கள்.
ஒன்று ஐடி தொழிலுக்காக சென்றவர்களாக இருக்கும். இல்லை இலங்கை போரின்போது ஐரோப்பா, வட அமெரிக்காவுக்கு சென்ற தமிழர்களாக இருக்கும். தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு பிரிட்டிஷ் காலத்தில், ராஜராஜ சோழன் காலத்தில் குடிபெயர்ந்தவர்கள் உள்ளார்கள். அதற்கும் முன் இலங்கையில் தமிழ் பேசிய மக்கள் இருந்தனர்.
இப்படி இருக்கும்போது ஒருவரை எந்த கட்டத்தில் வந்தேறி என்று சொல்வீர்கள். ஏனென்றால் அங்கு சென்று ஒரு வாழ்வாதாரத்தை தொடங்கிவிட்டார்கள். நான் சொல்வதெல்லாம் ஒரு 50, 60 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்தேறியாக வந்திருக்கிறார்கள் என்று பேசிக்கொண்டு இருக்கிறோம்.
ஒரே ஒரு விசயத்தைதான் தமிழன் எப்போதும் நம்பி இருக்கிறான். கணியன் பூங்குன்றனார் சொன்னார். அப்துல் கலாம் சொன்னார். நானும் சொல்கிறேன். யாதும் ஊரே யாவரும் கேளிர். வந்தேறி என்று சொல்லும் இனவெறியை, சாதி வெறியை, மத வெறியை தூக்கி ஓரம் வைத்தோம் என்றால் நம் நாட்டில் இன்னொரு பெண்ணை நிர்வாணப்படுத்தி பலாத்காரம் செய்ய மாட்டார்கள். மனிதரை மனிதனாக பார்ப்பதுதான் மனித மாண்பு." என்றார்.
இந்த நிலையில் மதன் கவுரியின் இந்த கருத்துக்காக அவரை நாம் தமிழர் கட்சியினர், பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அவர் ட்விட்டரில் வெளியிட்ட இந்த வீடியோவுக்கு கீழேயே பலர் அவரை கடுமையாக சாடி அவரையும் வந்தேறி என்ற அளவுக்கு விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் மதன் கவுரியை வந்தேறி என்று சொல்லி வீடியோவை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது, "யூடியூப் பார்வைகளை அதிகரிக்க ஒரே சம்பவத்தை பற்றி 10 காணொளிகள் போட்டு பணம் பார்க்கும் மதன் கௌரி போன்ற திராவிட பசங்களுக்கு இனம் மொழி ,தேசிய இன விடுதலை பகுறித்த எந்த பார்வையும் இருக்கப் போவதில்லை! தம்பிக்கு புரிவதும் போல் சாட்டையின் சிறப்புக் காணொளி loading ..." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications