அவங்கள பாருங்க.. என்னையும் பாருங்க.. நீங்களே முடிவு பண்ணுங்க.. நாம் தமிழர் வேட்பாளர் பிரச்சாரம்
நாம் தமிழர் கட்சி கோவை வேட்பாளர் கல்யாண சுந்தரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னை: நாம் தமிழர் கட்சியில் நாளுக்கு நாள் வித்தியாசம்.. வேட்பாளர்களின் அணுகுமுறையோ அதைவிட அம்சம்!
ஒரு பக்கம் வடசென்னை காளியம்மாள், மற்றொரு பக்கம் திண்டுக்கல் மன்சூரலிகான் என இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களை தங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்து வருகிறார்கள்.
அதேபோல, கோவையை சேர்ந்த வேட்பாளர் கல்யாணசுந்தரமும் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறார். புதுவித பிரச்சாரம் கோவை மக்களை கவர்ந்துள்ளது! கோவையில் சிபிஎம் வேட்பாளர் நடராஜன், பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனை எதிர்த்துதான் கல்யாண சுந்தரம் போட்டியிடுகிறார்.

சொத்து மதிப்பு
இவர் ஒரு அட்டவணை தயாரித்துள்ளார். அந்த அட்டவணையில் எதிர்க்கட்சி வேட்பாளர்களின் விவரங்களுடன் தன் சுய விவரங்களையும் அச்சிட்டு, இதனை பொதுமக்களிடம் வினியோகித்து வாக்கு சேகரித்து வருகிறார். அதில், வேட்பாளர்களின் பெயர், வயது, சொத்து மதிப்பு உள்ளிட்ட விவரங்கள் உள்ளன.

வாத்தியார் தொழில்
அதாவது இருக்கும் 3 வேட்பாளர்களிலேயே வயது குறைந்தவர் கல்யாணசுந்தரம். நடராஜன் வயது 68, சிபி ராதாகிருஷ்ணன் வயது 61, கல்யாண சுந்தரம் வயதோ 36! மற்ற இருவரின் தொழில் முழு நேர அரசியல் என்றால் கல்யாண சுந்தரமோ வாத்தியார் தொழில் பார்க்கிறார். நடராஜன் மீது 4 கேஸ்களும், சிபி ராதா மீது 1 கடன் நிலுவை கேஸ் உள்ளதாக சொல்லி, அந்த வழக்கின் விவரங்களை தெரிவித்துள்ளார். ஆனால் கல்யாணசுந்தரத்தின் மீது ஒரு வழக்கும் இல்லை.

நடராஜன்
குடும்பத்தின் சொத்து மதிப்பு, சிபி ராதாவுக்கு 69 கோடியே 75 லட்சத்து 638 ரூபாய் உள்ளது. நடராஜனுக்கு 2 கோடியே 47 லட்சத்து 24 ஆயிரத்து 430 ரூபாய் உள்ளது. ஆனால் கல்யாண சுந்தரத்துக்கு 8 லட்சத்து 55ஆயிரத்து 082 ரூபாய் இருக்கிறது.

சிபி ராதாகிருஷ்ணன்
இதுபோக கடன் பாக்கி பற்றின விவரமும் இந்த அட்டவணையில் உள்ளது. 32 லட்சத்து 34 ஆயிரத்து 168 ரூபாய் சிபிஎம் வேட்பாளருக்கும், 2 கோடியே 36 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் சிபி ராதாவுக்கும் கடன் இருக்கிறதாம். ஆனால் கல்யாண சுந்தரத்துக்கு எந்த கடன் பாக்கியும் இல்லை.

அக்மார்க் வேட்பாளர்
ஆக.. கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரைவிட சொத்து குறைவாக உள்ளதும், எந்த வழக்கும் இதுவரை இல்லாததும், முக்கியமாக தன் வாழ்க்கையில் கடனே இல்லாத ஒரு "அக்மார்க்" வேட்பாளராக நம்ம வாத்தியார் இருக்கிறார்! இந்த அட்டவணைதான் கோவை மக்களிடையே வேகமாக பகிரப்பட்டு வருகிறது!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications