"ம்மா.. கவலைப்படாதீங்க.. சீமான் அண்ணன் இருக்காரு".. திடீரென வைரலாகும் நாம் தமிழர் கட்சி விளம்பரம்
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் விளம்பரங்கள் வைரலாகி வருகின்றன
சென்னை: நாம் தமிழர் கட்சியின், தேர்தல் விளம்பரங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. விவசாயி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, பிரச்சாரங்களை சீமான் தொடங்கி உள்ளார்.
Recommended Video
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக - திமுக கட்சிகள் வழக்கம்போல மோத உள்ளன.. இதில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தோடு இணைந்து சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்க உள்ளன. இன்னொரு பக்கம் நாம் தமிழர் கட்சி, அமமுகவும் தனித்தனியாக களமிறங்கி உள்ளன.
இதில், எப்போதும் போலவே, இந்த முறையும் 234 தொகுதிகளுக்கும் சரிபாதியாக ஆண், பெண் வேட்பாளர்களைக் களமிறக்கி உள்ளார் சீமான். இது தொடர்பாக சென்னையில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் விழாவும் நடந்தது.. இதையடுத்து தேர்தல் வேலை மும்முரமாகியும் உள்ளது.

விவசாயி சின்னம்
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பாக தேர்தல் விளம்பரம் ஒன்று வெளியாகி உள்ளது.. விவசாய சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதால், அக்கட்சிக்கு வாக்கு கேட்டு சீமானின் குரல் இந்த விளம்பரங்களில் ஒலிக்கிறது.. 3 விதமான விளம்பர காட்சிகள் வெளியாகி உள்ளன.. அதில், விவசாயி ஒருவர் வயலில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கிறார்.. அப்போது அங்கு அவரிடம் ஓட்டு கேட்க சிலர் வருகிறார்கள்.. அவர்களிடம் விவசாயி, "போடா வெட்டி பயலே.. ஊருக்கே சோறு போடற விவசாயிடா நான்.. என் ஓட்டு விவசாயிக்குதான்.." என்கிறார்.

அண்ணன் சீமான்
இன்னொரு விளம்பரத்தில், "என்னங்க இதுவரைக்கும் பிள்ளையை படிக்க வெச்சாச்சு.. இதுக்கும் மேல முடியலன்னா, கடனை வாங்கியாவது படிக்க வைக்கணும்" என்று மனைவி கணவனிடம் சொல்கிறார். இதைக்கேட்ட அவர்களது மகள், "அம்மா, நீங்க ஏன் கவலைப்படறீங்க... தரமான கல்வியும், கல்விக்கேத்த வேலையும் தர்ற போறதா நம்ம அண்ணன் சொல்லி இருக்கார்.. நீங்க விவசாயி சின்னத்துல மட்டும் ஓட்டுப்போடுங்க.. மத்தத எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க:" என்கிறார்.

யாருக்கு ஓட்டு?
மற்றொரு விளம்பரத்தில், வீட்டில் மனைவியிடம், "சோறு போடும்மா" என்று சொல்கிறார் கணவர்.. அதற்கு மனைவி, "உங்க ஓட்டை யாருக்கு போட போறீங்க?" என்று கேட்கிறார்.. அதற்கு அவர், "யாருக்கோ ஒருத்தருக்கு போடறேன், நீ சோறு போடு" என்கிறார். அதற்கு அந்த மனைவியோ, "உப்பிட்டவரை உள்ளளவும் நினைன்னு சொல்லி இருக்காங்க.. நீ என்னைக்காவது இந்த சாப்பாட்டுக்கு காரணமாக இருக்கிற விவசாயியை யோசிச்சு பார்த்திருக்கியா? உன் ஓட்டு விவசாயி சின்னத்துக்கு போடுவேன்னு சொல்லு, அப்பதான் உனக்கு சாப்பாடு" என்கிறார்.

வைரல் வீடியோ
இந்த விளம்பரங்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. "நமது சின்னம் விவசாயி.. போட்டுப் பாருங்க ஓட்டை.. அப்பறம் பாருங்க நாட்டை" என்று சீமானின் குரல் ஒவ்வொரு விளம்பர இறுதியிலும் ஒலிக்கிறது.. இந்த விளம்பரங்களை நாம் தமிழர் கட்சியினர் ஷேர் செய்து வருவதுடன், வைரலாக்கியும் வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications