50 வயசாகுது.. ரோஸ் பவுடர் போட்டுக்குது.. கீழே இறங்குறது இல்லை.. நாம் தமிழர் வேட்பாளர் நக்கல்!

தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அந்த அம்மாவுக்கு வயசு 50 ஆயிடுச்சு.. ரோஸ் பவுடர் போட்டுக்குது.. அந்த குளுகுளு காரை விட்டு கீழேகூட இறங்குகிறது இல்லை. அப்படியே இந்த தொகுதியில் வந்து ஓட்டு கேட்குது" என்று கரகரத்த குரலில் பேசி ஓட்டு வேட்டையில் இறங்கி உள்ளார் தூத்துக்குடி வேட்பாளர் கிரிஸ்டன்டைன் ராஜசேகர்!

ரொம்பவும் எளிமையான தோற்றம் என்றாலும் ஆழமான கருத்துக்களை அசால்ட்டாக சொல்லி ராஜசேகர் வாக்கு கேட்கிறார். அவரது பேச்சுக்களிலிருந்து ஒரு சில துளிகள்:

அன்னைக்கு துப்பாக்கி சூடு நடத்தினப்போ கீதா ஜீவன் மட்டும் முன்னாடி வந்து நின்றிருக்க வேண்டியதுதானே.. ஒரு பய சுட்டிருப்பானா? சுட்டிருக்க மாட்டான், ஆனா இவங்களும் வந்து முன்னாடி நிக்க மாட்டாங்க.

நாட்டின் ஏழை

நாட்டின் ஏழை

இந்த நாட்டின் ஒரு ஏழை தாயின் மகன்.. 10 லட்சம் ரூபாய்க்கு கோட்-சூட் போட்டிருக்கிற ஒரு ஏழை தாயின் மகன்.. ஏழேகால் லட்சத்துக்கு கண்ணாடி போட்டிருக்கிற ஒரு ஏழைதாயின் மகன்.. ஒன்னே கால் லட்ச ரூபாய்க்கு பேனா வெச்சிருக்கிற ஏழை தாயின் மகன்.. ஓட்டு கேட்கிறார்.

குளுகுளு கார்

குளுகுளு கார்

இங்க 4 கோடி ரூபாய் குளுகுளு காரில் ஒரு அம்மா வருது. ஒரு பட்டனை தட்டுது. அந்த கார் சீட் முன்னாடி வந்து, அப்படியே மேல வந்து நிக்குது. அந்த வாகனத்தில் மாட்டியிருக்கிற மைக் மட்டும் ஒன்னேகால் லட்சம்னு சொல்றாங்க.

50 வயசு

50 வயசு

அந்த காருக்குள்ள இந்த சைட் ஏசி, அந்த சைட் ஏசி, பின்னாசி ஏசி, முன்னாடி ஏசி.. கைக்கு ஏசி.. காலுக்கு ஏசி-ன்னு இருக்கு. அந்த அம்மா உடனே ரோஸ் பவுடர் போட்டுக்குது. வயசு 50 ஆயிடுச்சு. இவ்வளவும் செஞ்சுட்டு ஓட்டு கேட்க போகுது. ஒரு வாகனத்தை விட்டு கீழே இறங்கி வந்து மக்கள் கிட்ட நின்னு ஓட்டு கூட கேட்க முடியாத இந்த வேட்பாளர், மக்களுக்கு என்ன செய்வார்?

கையை வெட்டுவேன்

கையை வெட்டுவேன்

நமக்கு சொந்தமான ஆற்றுமணலை எடுத்து விற்கிறார்கள். கேடு கெட்ட திருட்டு பயலுகளுக்கு எல்லாம் மரியாதை வேறயா இந்த நாட்டுல? என்னை பாராளுமன்ற உறுப்பினரா தேர்ந்தெடுத்து பார்.. ஒரு மூட்டை மண்ணு எடு பார்ப்போம்.. கையை வெட்டிடுவேன்.. எங்களுக்கு அலங்காரமா பேச தெரியாது.. ஏசதான் தெரியும்.

மலரும், மலரும்!

மலரும், மலரும்!

இப்ப இந்த ஊருல போட்டியில பாஜக கிடையாது. அது 4-வது இடத்துல எங்கியோ இருக்கு. அதுபாட்டுக்கு தனியா கிடந்து மலரும், மலரும்னு சொல்லிக்கிட்டு இருக்கட்டும்.. அதைவிடுங்க.. ஆனா போட்டி கருணாநிதி மகளுக்கும், வேலுபிள்ளை பிரபாகரனின் பிள்ளைக்கும்தான்!" என்கிறார் ஆவேசமாக!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+