UPSC தேர்வு.. தமிழ்நாட்டில் இருந்து வென்ற 60 பேரில்.. 56 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயின்றவர்கள்
சென்னை: தமிழ்நாட்டில் இருந்து யுபிஎஸ்சி தேர்வில் வென்ற 60 பேரில் நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக மட்டும் 56 பேர் பயிற்சி பெற்றவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதிலும் 39 பேர் அரசு பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் என்றும், இதற்கு முக்கியமான காரணம் நான் முதல்வன் டீம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணிக்கான காலியிடங்கள் யுபிஎஸ்சி தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் மொத்தமாக 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் இறுதித்தேர்வான நேர்காணல்களுக்கு மட்டும் தமிழ்நாட்டில் இருந்து 140 பேர் பங்கேற்றிருந்தனர்.

அதில் தமிழ்நாட்டில் இருந்து 60 பேர் மொத்தமாக யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அதிலும் 10 ஆண்டுகளுக்கு பின் டாப் 10 இடங்களில் 2 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி 2வது இடத்தையும், ராஜா மொகைதீன் 7வது இடத்தையும் பிடித்து அசத்தி இருக்கின்றனர். இது தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது.
ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருந்தது. இம்முறை அது அதிகரித்திருக்கும் சூழலில், மற்றொரு முக்கியமான தகவலும் வெளியாகி இருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் இருந்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற 60 பேரில் 56 பேர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக போட்டித் தேர்வுகளுக்கான கூடுதல் இயக்குநர் டாக்டர் சங்கர சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வான 60 பேரில் நான் முதல்வன் திட்டத்தில் இருந்து மட்டுமே 56 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் அரசு பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் மட்டும் 39 பேர். இதுவொரு நல்ல ரிசல்ட்.. அதேபோல் ராஜேஸ்வரி 2வது இடம் பிடித்துள்ளார்.
ராஜா மொகைதீன் 7வது இடம் பிடித்துள்ளார். இன்னொரு நபர் 18வது இடம் பிடித்திருக்கிறார்.. கடந்த 10 ஆண்டுகளில் டாப் 20 இடங்களில் 3 பேர் வந்திருப்பது இதுவே முதல்முறையாகும். நான் முதல்வன் திட்டம் என்பது வேறு எந்த மாநிலமும் செய்யாத ஒன்றாகும். அதாவது Prelims தேர்வில் வென்றால் ரூ.7,500 மாதந்தோறும் அளிக்கப்படுகிறது.

அதேபோல் மெயின்ஸ் தேர்வில் வெற்றிபெற்ற பின் ஒவ்வொரு மாதமும் ரூ.50 ஆயிரம் அளிக்கப்படுகிறது. நேர்காணலுக்கு ரூ.75 ஆயிரம் அளிக்கப்படுகிறது. இம்முறை நேர்காணலில் பங்கேற்பதற்கு முன் அரசு பயிற்சி மையத்தில் பயிற்சிக்காக மட்டும் 111 பேர் வந்தனர். நான் முதல்வன் திட்டத்தில் அவர்களுக்கு ஃபெல்லோஷிப் கொடுத்த பின், அவர்கள் எந்த பயிற்சி மையத்தில் வேண்டுமானாலும் சென்று படித்திருக்கலாம்.
இதனால் அரசு பயிற்சி மையத்தின் நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது. அதற்கு முக்கியமான காரணம் நான் முதல்வர் டீம். அவர்கள் கொடுக்கும் அகாடமிக் பயிற்சி வேறு எங்கும் இருக்காது. வழக்கமாக தனியார் பள்ளி, தனியார் மருத்துவமனை நன்றாக இருக்கும் என்பார்கள் அல்லவா.. ஆனால் ஐஐடி மாதிரி நம்பகத்தன்மை அரசு பயிற்சி மையம் மீது வந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இதன் கிராஃப் அதிகரித்து கொண்டே செல்கிறது.. அதற்கு நான் முதல்வன் டீம் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
-
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications