நாடக காதல் பண்றதும் ஒன்னுதான்.. பெண்ணை சீரழிப்பதும் ஒன்னு தான்.. இயக்குனர் பேரரசு ஆவேச பேச்சு
சென்னை: நாடக காதல் பண்றதும் ஒன்னுதான்.. ஒரு பெண்ணை சீரழிப்பதும் ஒன்னு தான் என்று இயக்குனர் பேரரசு ஆவேசமாக பேசினார். குழந்தை C/O கவுண்டம்பாளையம் இசை வெளியிட்டு விழாவில் இயக்குனர் பேரரசு இவ்வாறு பேசினார்.
ரஞ்சித் நடிப்பில் உருவாகியுள்ள குழந்தை C/O கவுண்டம்பாளையம் படத்தின் ஆடியோ லான்ச் விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித், இயக்குனர் பிரவீன் காந்தி, இயக்குனர் பேரரசு உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பேரரசு நாடக காதல் குறித்து ஆவேசமாக பேசினார்.

இயக்குனர் பேரரசு பேசியதாவது:- இப்போது எதாவது சொன்னால், இதில் இருந்து ஒரு புது பிரச்சினை வரக்கூடாது. அப்படி பேசுபவர்கள் தான் சிறந்த கலைஞன். ஒரு துளி நெருப்பு கிடந்தால் அதில் தண்ணீரை ஊற்றுகிறாயா இல்லை பெட்ரோலை ஊற்றுகிறாயா என்பது தான் பிரச்சினை. இவர் தண்ணீர் ஊற்றுகிறார். இப்போதைய தலைமுறைக்கான படம் இது.
நம்ம வீட்டு பொன்னை.. பொன்னுங்கள ஒருத்தன் சீரழித்தால் என்ன கோபம் வரும் நமக்கு.. என்ன கொதிப்பு வரும் நம்மளுக்கு.. என்ன வேகம் வரும்.. அப்படித்தான் இந்த படத்தை பார்த்தால் நமக்குள் ஒரு வேகம் வரும். அப்படி இருக்கிறது. மனித ஜாதிக்கான படம் இது. ஒரு பணக்கார வீட்டு பெண்ணை ஒருத்தன் ஏமாற்றி.. டிராமா பண்ணி சீரழித்தால் அது சரியா? தவறா? சொல்லுங்க..
நாடக காதல் என்று சொன்னால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது.. அப்புறம் ஏன் ஜாதி முத்திரை குத்துகிறீர்கள்.. நான் சொல்கிறேன்.. நாடக காதல் பண்றதும் ஒன்னுதான்.. ஒரு பெண்ணை கற்பழித்து சீரழிப்பதும் ஒன்னு தான்.. இரண்டும் ஒன்னு தான். நாடக காதல் பண்ணினாலே இவன் இந்த ஜாதியா இருப்பானோ.. அந்த ஜாதியா இருப்பானோ? என எண்ணுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தான் அதில் வேதனை படுவார்கள்.
எந்த ஜாதிக்காரர்களாக இருந்தாலும் ஒரு பெண்ணை ஏமாற்றுகிறார் என்றால் அவன் மனித ஜாதி இல்லை.. மிருகம். யாராக இருக்கட்டும். ஒரு கஷ்டப்படுகின்ற பொன்னா இருக்கு.. ஏழையாக இருக்கு.. அந்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடு என்று சொல்கிறவன் தான் பெரிய மனுஷன். அதைவிட்டுவிட்டு ஒரு பெண்ணை வழிக்கு கொண்டு வர மேட்டர் பண்ண சொல்லுகிறவன் எப்படி பெரிய மனுஷனாக இருக்க முடியும்..
இதை சொன்னால் அவன் இந்த ஜாதியோ.. அந்த ஜாதியோ.. ஒரு ஒரு அநியாயத்தை தட்டிக்கேக்க அவருக்கு சாதி தேவையில்லை. அவர் மனித ஜாதியாக இருந்தால் போதும். ரஞ்சித் இந்த படத்தில் தகப்பனாக இருந்து கோவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த கோபம் பெண்ணை பெற்ற எல்லாருக்கும் வரனும்.. இதில் ஏன் ஜாதியை பார்க்கிறீங்க..
ஒரு பொன்னு.. பணக்கார பொன்னு.. மேல் ஜாதி பொன்னு.. லவ் பண்ணி வளைச்சு போட்டால் செட்டில் ஆகிடலாம். என்று சொன்னால் தான் அவர் தப்பான இயக்குனர். மேட்டர முடி.. அப்புறம் கல்யாணம் பண்ணு என்று சொன்னால் தான் தப்பான இயக்குனர். நாடக காதல் பண்ணி ஏமாற்றுகிறவனை வெட்டி சாய் என்று சொல்கிறவர் சரியான இயக்குனர்.. ஒரு பெண்ணை ஒருவர் ஏமாற்றினால் தப்பா தப்பு இல்லையா..
இப்போ எல்லா நம்பியார்.. வீரப்பா கேரக்டர்களை எல்லாம் ஹீரோவ பண்ண சொல்கிறீர்கள்.. அது உங்களுக்கு சரியாக படுகிறதா.. சமூகத்தை சீரழிக்கிறவர்கள் நல்ல இயக்குனர்களாக இருக்க முடியாது. ஒரு இயக்குனர் நல்ல விஷயங்களுக்கு சமூக அக்கறையோடு படம் எடுக்க வேண்டும். ஒரு புது பிரச்சினையை உருவாக்க கூடாது. பிரச்சினைய தீர்க்கக்கூடியவராக இருக்கனும்.
உங்கள் வியாபாரத்திற்காக எடுக்காதீர்கள். யாரும் வியாபாரியாக இருக்காதீங்க. உங்கள் வியாபாரத்திற்காக சாதியையும் சமூகத்தையும் மூலதனமாக்காதீர்கள். அப்படி இல்லையா ஒரு குடும்ப படத்தை எடுங்க.. பொழுதுபோக்கு படத்தை எடுங்க.. காமெடி படத்தை எடுங்கள்.. தப்பேயில்லை. இவ்வாறு பேரரசு பேசினார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தவர் இயக்குனர் பேரரசு. சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ் திரையுரகில் முதன்முறையாக எதிரும் புதிரும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார்.
இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜயின் வாழ்க்கையில் மறக்க முடியாத படங்களான திருப்பாச்சி, சிவகாசி ஆகிய இரண்டு மிகப்பெரிய வெற்றி படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். சிவகாசி, திருப்பாச்சி, தர்மபுரி, திருப்பதி, பழனி, திருவண்ணாமலை என ஊர் பெயர்களையே படங்களின் டைட்டிலாக வைத்து வெற்றி பெற்றவர் இவர்.
விஜய் மட்டுமல்லாது நடிகர் அஜித், விஜயகாந்த், அர்ஜுன், பரத் என பல முன்னணி நடிகர்களோடு கைகோர்த்தார். விஜய் அஜித் நடித்த படங்களை தவிர மற்ற திரைப்படங்கள் அவ்வளவாக ஓடாத நிலையில் திரையிலிருந்து மெல்ல ஓரம் கட்டப்பட்ட அவர் கடந்த சில ஆண்டுகளாக திரைப்பட விழாக்களில் மட்டுமே கலந்து கொண்டு பேசி வருகிறார்.












Click it and Unblock the Notifications