ஜூன் 23ல் நடிகர் சங்கத் தேர்தல்.. நாட்டாமையை தூக்கிய விஷாலுக்கு கடும்போட்டி தரப்போவது ராதிகா
சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ஆம் தேதி எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் மற்றும் விஷால் தலைமையிலான அணி, சரத்குமார்-ராதாராவி அணியை தோற்கடித்து வென்றது- இதில் நாசர் தலைவராகவும், விஷால் பொதுச்செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும், துணை தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.

இவர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவு பெற்றது. ஆனால் நடிகர் சங்க வேலைகள் காரணமாக புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் 6 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இதனிடையே சமீபத்தில் நடிகர் சங்க கூட்டம் நடந்தது . அந்த கூட்டத்தில் நடிகர் சங்க தேர்தலை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமயில் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் இதற்கான ஆவணங்களையும் நீதிபதி பத்மநாபனிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில் ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் இன்று வெளியிட்டுள்ள அறவிப்பில், நடிகர் சங்க தேர்தல் ஜுன் 23ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறும் என அறிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்புமனுக்களை 11.6.2019 காலை 11 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இறுதியாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் 14.06.2019 அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறையும் தலைவர் பதவிக்கு நாசர், செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணை தலைவர் பதவிக்கு கருணாஸ் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளார்களாம். இதற்கிடையே சரத்குமார் மற்றும ராதாரவி நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ராதிகா தலைமையில் எதிரணி களம் இறங்க உள்ளது. இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என்கிறார்கள்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications