"ஹிஜாப்பை கழட்டு".. லேடி டாக்டரை ஓவராக மிரட்டிய பாஜக நிர்வாகி.. இப்ப அதிரடி கைது.. நாகையில் பரபரப்பு
சென்னை: நாகை அருகே ஹிஜாப் அணிந்த பெண் டாக்டருக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக நிர்வாகி புவனேஸ்வர் ராமை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.. ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரிடம், போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி பகுதியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 24ம் தேதி இஸ்லாமிய பெண் டாக்டர் நைட் டியூட்டியில் இருந்தார். அப்போது, தங்கள் மத வழக்கப்படி அவர் ஹிஜாப் அணிந்துள்ளார்.

நெஞ்சுவலி:
அப்போது சிந்தாமணி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.. இதனால், அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
பணியிலிருந்த பெண் டாக்டரும், சுப்பிரமணியனின் உடல்நிலையை பரிசோதித்து உடனடியாக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு உடன் வந்தோரிடம் தெரிவித்தார்... அப்போது, சுப்பிரமணியனை அழைத்து வந்த புவனேஷ்ராம் என்பவர் என்பவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு மருத்துவரிடம் வாதம் செய்ய ஆரம்பித்தார். புவனேஷ்ராம் அதே பகுதியை சேர்ந்தவர்.. பாஜக நிர்வாகியும்கூட..
யார் நீங்கள்:
பெண் மருத்துவரிடம், "நீங்க டியூட்டில இருக்கீங்க.. உங்க யூனிஃபார்ம் எங்கே? நீங்க ஏன் ஹிஜாப் அணிந்து இருக்கீங்க? நீங்க டாக்டர் என்பதே எனக்கு டவுட்டா இருக்கு.. MD அரவிந்த் டாக்டர் எங்கே? நீங்கதான் டாக்டரா? நீங்க டாக்டர் என்பதற்கு என்ன ஆதராம் இருக்கு? ஹிஜாப் அணிந்துகொண்டு கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கீங்களே" என்று மிரட்டல் தொனியில் பேசியிருக்கிறார்.. அத்துடன், இதை தன்னுடைய செல்போனிலும் வீடியோவாக பதிவு செய்து கொண்டார்..
இதனிடையே, அந்த பெண் மருத்துவர், "பெண்கள் டியூட்டியில் இருக்கும்போது அசிங்கமாக பேசிக்கொண்டிருக்கிறார்.. ஒரு லேடி டாக்டரை, அவரது அனுமதியில்லாமல் வீடியோவும் எடுத்துக்கொண்டிருக்கிறார்" என்று சொல்லி அவரும் பதிலுக்கு செல்போனில் வீடியோ எடுத்தார்..
2 வீடியோக்கள்:
இந்த 2 வீடியோக்களும்தான் சோஷியல் மீடியாவில் வேகவேகமாக பரவ தொடங்கியது.. இந்த விஷயம் தெரிந்து, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவிக்க ஆரம்பித்தன..
கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, விசிக போன்ற கட்சிகள், சம்பந்தப்பட்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியலிலும் ஈடுபட்டனர்... தகவலறிந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்தார்கள்.. ஆனால், அதற்குள் அந்த பாஜக நிர்வாகி தலைமறைவாகிவிட்டார்.. இதனிடையே மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.
"ஒரு பெண் மருத்துவரிடம் இதுபோன்ற வெறுப்பு பேச்சைப் பேசுவதும், அவர் ஹிஜாப் அணிந்திருந்த காரணத்தால் அவரை மிரட்டுவதும் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் செயலாகும். மேலும், மருத்துவர்கள், மருத்துவ சேவைப் பணியாளர்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாக்கி, அப்பகுதியின் சமூக நல்லிணக்கதை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டிருந்தார்.
கலைந்து சென்றனர்:
இதையடுத்து, தலைமறைவான பாஜக நிர்வாகியை தேடும் படலம் தீவிரமானது.. இதற்காகவே, 6 பேர் கொண்ட டீம் ஒன்றும் அமைக்கப்பட்டு, அவரை தேடி வந்தனர்.. இந்நிலையில், பாஜக நிர்வாகி புவனேஸ்வர் ராம் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications