நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் சகோதரர் இல. கோபாலன் காலமானார்! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
சென்னை: நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் சகோதரர் இல. கோபாலன் இன்று காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் இல.கோபாலன் (83) காலமானார்.
நாகாலாந்து மாநில ஆளுநராகப் பணியாற்றி வருகிறார் இல.கணேசன். முன்னதாக மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநராகவும் பணியாற்றினார். பாஜகவில் மாநில தலைவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இல கணேசன், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.

நாகாலாந்து ஆளுநரான இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலன். இல.கோபாலனின் சதாபிஷேக விழா (80வது பிறந்தநாள் விழா) கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க ஆளுநர் மம்தா பானர்ஜி, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில், இல.கோபாலன் தனது 83வது வயதில் இன்று காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் இல.கோபாலன் (83) காலமானார். இல.கோபாலனின் உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இல.கோபாலன் மறைவு, அவரது உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் பாஜகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இல.கோபாலன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நாகாலாந்து ஆளுநர் மாண்புமிகுஇல.கணேசன் அவர்களின் அண்ணன் இல.கோபாலன் அவர்கள் இன்று (08-01-2025) காலை மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மாறாத பற்று கொண்ட இல.கணேசன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பினால் அவரைப் போன்றே நானும் வருந்துகிறேன். உடன்பிறந்த அண்ணனை இழந்து தவிக்கும் அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications