La Ganesan Death: இல.கணேசன் காலமானார்! சிகிச்சை பலனின்றி இன்று மாலை மறைவு!
சென்னை: நாகாலாந்து மாநில ஆளுநரும், பாஜகவில் மூத்த தலைவராக இருந்தவருமான இல.கணேசன் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 80. இல.கணேசன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த இல.கணேசன் இன்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். மருத்துவமனையில் இருந்து இல.கணேசனின் உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் (80). அண்மையில் சென்னை வந்திருந்த நிலையில் வீட்டில் அவர் கால் தவறி கிழே விழுந்ததில், அவரது தலையில் பலத்த அடி பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவர் விரைவில் நலம்பெற்று, மீண்டும் நல்ல உடல்நிலைக்கு திரும்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இல.கணேசன் இன்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக இருந்த நிலையில், தற்போது நாகலாந்து ஆளுநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1945 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்த இல.கணேசன் பாஜகவின் மூத்த தலைவர் ஆவார். சிறுவயது முதலே ஆர்எஸ்எஸ் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, அந்த அமைப்பில் ஈடுபட்டு வந்த இல.கணேசன் பின்னர் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். அரசியல் ஈடுபாடு காரணமாக திருமணம் செய்து கொள்ளலாமல் தனது அண்ணன் குடும்பத்துடன் வசித்து வந்தார் இல.கணேசன்.
பின்னர் தமிழக பாஜக-வின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். பாஜகவின் தேசிய செயலாளர், துணை தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தார். ராஜ்யசபா உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார்.
பாஜகவில் நீண்டகாலம் உறுப்பினராக இருந்து வந்த இல.கணேசனை கடந்த 2021 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் மேற்கு வங்கத்திற்கும் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். பின்னர், 2023 ஆம் ஆண்டு நாகலாந்து மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
-
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications