இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
சென்னை: இசைஞானி இளையராஜாவுக்கு முதன்முதலில் கம்போஸ் செய்ய வாய்ப்பு கொடுத்தவர் நாகூர் ஹனீபாதான். இந்த தகவல் யாருக்கெல்லாம் தெரியும்?
ஒரு விழாவில் நாகூர் ஹனீபா கூறியிருப்பதாவது: 1971 அல்லது 1972 ஆம் ஆண்டில் நான் எம்எல்சியாக (சட்டமேலவை உறுப்பினர்) இருந்தேன். நான் எம்எல்ஏ ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். ஒரு நாள் காலையில் 6 மணி இருக்கும். என் அறை கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டது.

கதவை திறந்ததும் அங்கு வெளியே ஒரு தம்பி நின்றுக் கொண்டிருந்தார். நீங்கள் யார் என கேட்டேன். அதற்கு அவர் "ஐயா என் பெயர் ராசைய்யா. பாவலர் பிரதர்ஸ் என்ற பெயரில் நான் ஒரு இசைக் குழுவை நடத்தி வருகிறேன். நீங்கள் முகமது நபி அவர்கள் மீது பாடும் இசைத் தட்டுகளுக்கு நான் இசையமைக்க வேண்டும்" என கூறினார்.
அப்போது அவரை உள்ளே அழைத்த நான், தம்பி எச்எம்வி ரெக்கார்ட் கம்பெனியினர்தான் இசையமைப்பாளரை ஏற்பாடு செய்வார்கள். நீங்கள் அவர்களிடம் பேசிக் கொள்ளுங்கள் என்றேன். உடனே அந்த தம்பி, "நான் அவர்கள் சொல்லித்தான் இங்கே வந்தேன்" என்றார். உடனே நான் ஒரு பாட்டை சொல்கிறேன் , அதற்கு நாளை வந்து ட்யூன் போடுங்கள் என்றேன்.
உடனே அடுத்த நாள் ராசய்யா வந்தார். அவருக்கு நான் ஒரு பாட்டை சொன்னேன். அது எந்த பாடல் என்றால் "தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு, எங்கள் திருநபியிடம் போய் சொல்லு, சலாம் சொல்லு". இந்த பாடலுக்கு மட்டு போடுங்கள் என்றேன். அப்போது என் அறையில் ஒரு ஹார்மோனியப் பெட்டி இருந்தது. உடனே அதை எடுத்து வாசித்தார்.
எனக்கு பெரிய ஆச்சரியம். தென்றே வந்துவிட்டது போல் இருந்தது. இப்போது அந்த பையன் இல்லை, பெரிய மனுஷன். உடனே தம்பி "நீங்கள் நல்லா வருவீங்கள்" என வாழ்த்தினேன். அந்த பாடல் கேசட்டுகளும் நன்றாக விற்பனையாகின. இதுதான் இளையராஜாவுக்கும் எனக்குமான தொடர்பு. இவ்வாறு நாகூர் ஹனீபா, ஒரு விழாவில் தெரிவித்திருந்தார்.
நாகூர் ஹனீபா, இசை முரசு என்ற பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டவர். இவர் நபிகள் நாயகத்தை புகழ்ந்து பாடல்களை பாடி வந்தார். திராவிடக் கொள்கையில் தீவிர பற்றுக் கொண்டவர். திமுகவின் ஆரம்ப காலம் முதல் இறுதி வரை பயணித்தார். இவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர். பாவமன்னிப்பு படத்தில் எல்லோரும் கொண்டாடுவோம் என்ற பாடலை டி.எம்.சவுந்திரராஜனுடன் இணைந்து பாடினார். இவர் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் இருந்தார்.
இதுவரை நான் கேள்விப்படாத தகவல்:
— ☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist (@im_inba1) April 24, 2024
நாகூர் ஹனிபாவின் தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு என்ற பாடலுக்கு இளையராஜா மெட்டு அமைத்து மியூசிக் கம்போஸ் பண்ணி இருக்காரா? இது எனக்கு ஆச்சரியமான தகவல் கேளுங்களேன்!!!! pic.twitter.com/6XPGI0hyIn
தனது 11 ஆம் வயதில் பள்ளிக் கூடத்தில் பாடினார். பிறகு தனது 13 வயதில் திருமண வீடுகளில் எல்லாம் பாடினார். இதுவரை நாகூர் ஹனீபா நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பக்தி பாடல்களையும் திமுகவின் கட்சி பாடல்களையும் பொது பாடல்களையும் ஹனீபா பாடியுள்ளார். இவர் இலங்கையில் பல தடவை இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ளார்.
திமுகவின் பிரச்சார பாடல்களை இவர்தான் பாடினார். இவர் தனது வீடுகளுக்கு அண்ணா இல்லம், கலைஞர் இல்லம், காயிதே மில்லத் இல்லம் என பெயர் சூட்டினார். இவர் பாடிய பாடல் இறைவனிடம் கையேந்துங்கள் என்பதுதான்! இவர் கடந்த 2015ஆம் ஆண்டு காலமானார். இவருடைய உடல் நாகூர் தர்கா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த தென்றல் காற்றே என தொடங்கும் பாடல்களான தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு.. அங்கே சென்று அன்பைச் சொல்லு..., தென்றல் காற்றே தென்றல் காற்றே சேதி ஒன்னு கேட்டீயா என்ற பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications