ஓபிஎஸ், அண்ணாமலைக்கு பின்.. டிசம்பர் 14ல் அமித்ஷாவை சந்திக்கும் நயினார்.. பின்னணி இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டிசம்பர் 14ஆம் தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ், அண்ணாமலை ஆகியோருடன் அமித்ஷா ஆலோசனை நடத்தி இருந்த நிலையில், நயினார் நாகேந்திரனுடன் அடுத்தக் கட்டமாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதேபோல் என்டிஏ கூட்டணியில் இணைய உள்ள கட்சிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக - பாஜக கூட்டணி அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் முடிவடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி கூட்டணியை விரிவாக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளார். அதேபோல் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் விரைவில் சென்னைக்கு வர திட்டமிட்டிருக்கிறார்.

Nainar Amitshah meeting

அதற்கு முன்பாக கூட்டணி விவகாரங்களை பேசி முடிப்பதற்காக அமித்ஷா பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார். டிசம்பர் முதல் வாரத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை அழைத்து அமித்ஷா ஆலோசித்திருந்தார். அதன்பின் அண்ணாமலையுடன் சந்திப்பு நடத்தி இருந்தார். தொடர்ந்து கோவையில் டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை மீண்டும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை செய்தார்.

இதனால் என்டிஏ கூட்டணிக்குள் இரு கட்சிகளையும் கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அமித்ஷாவை சந்திக்கும் நயினார் நாகேந்திரன், கூட்டணி கட்சிகள் இணைப்பது மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதேபோல் தமிஅக அரசியல் சூழல் தொடர்பாகவும், திமுகவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது அமித்ஷாவின் கருத்துக்களை சொல்வதற்கு வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

அதிமுக ஒன்றியணைப்பு தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் டெல்லி பயணத்திற்கு முன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ளும் வகையில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாக விவரம் அறிந்த சிலர் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+