Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக பாஜகவின் புதிய தலைவர்.. நயினார் நாகேந்திரன் vs ஆனந்தன் அய்யாசாமி.. பந்தயத்தில் முந்துவது யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜகவின் அடுத்த மாநில தலைவருக்கான போட்டியில் நயினார் நாகேந்திரன் மற்றும் ஆனந்த அய்யாசாமி ஆகிய இருவருக்கும் இடையில் போட்டி ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அண்ணாமலை அடுத்த தலைவருக்கான போட்டியில் இல்லை என்று அறிவித்துள்ள நிலையில், அவரை போன்ற இளம் தலைவர் ஒருவரை நியமிக்க பாஜக தலைமை முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இதன்பின் பாஜக - அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியான நிலையில், தமிழக பாஜகவுக்கான அடுத்த மாநில தலைவருக்கான நியமனம் குறித்த பேச்சுகளும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக மாநில தலைவருக்கான பந்தயத்தில் தாம் இல்லை என்று அண்ணாமலை அறிவித்தார்.

Annamalai Anandhan Ayyasamy

தமிழ்நாடு வரும் அமித் ஷா

இதனால் தமிழக பாஜகவின் அடுத்த தலைவராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த போட்டியில் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வருகிறார். இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இந்த ஆனந்த அய்யாசாமி?

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவருக்கான பந்தயத்தில் நயினார் நாகேந்திரன் முன்னணியில் இருந்தாலும், இன்னொரு பெயரும் நயினார் நாகேந்திரனின் பெயருடன் அடிபடுவதாக கூறப்படுகிறது. அது தென்காசி மாவட்ட பாஜக தலைவரான ஆனந்தன் அய்யாசாமியின் பெயர்தான். தமிழக பாஜகவின் ஸ்டார்ட்அப் செல் பிரிவின் தலைவராகவும் ஆனந்தன் அய்யாசாமி செயல்பட்டு வருகிறார்.

ஸ்ரீதர் வேம்பு கனெக்ட்

அதேபோல் அண்ணாமலை நடத்திய என் மண் என் மக்கள் யாத்திரையின் தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் பொறுப்பாளராகவும் ஆனந்த அய்யாசாமி செயல்பட்டார். இவர் தென்காசியில் ஏராளமான என்ஜிஓ நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிரபல ஐடி நிறுவனமான ஜோஹோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்புவுக்கு நெருக்கமாக இருப்பவர் ஆனந்தன் அய்யாசாமி.

அண்ணாமலை - ஆனந்தன் அய்யாசாமி

20 ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள இண்டெல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், தற்போது தமிழ்நாடு பாஜகவுக்காக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி தென் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, ஆனந்தன் அய்யாசாமி அதிக நெருக்கம் காட்டியிருந்தார்.

தென் மாவட்டங்களில் பாஜக

கடந்த முறை அண்ணாமலை மாநில தலைவராக நியமிக்கப்படுவார் என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்தது. அதுபோல் மீண்டும் ஒரு இளம் தலைவரை தேர்வு செய்ய பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் அண்ணாமலையை வைத்து கொங்கு மண்டலத்தில் பாஜக வலிமையானதை போல், தென் மாவட்டங்களில் ஆனந்தன் அய்யாசாமி மூலமாக வலிமை பெற முடியும் என்று பார்க்கப்படுகிறது.

நயினார் vs ஆனந்தன் அய்யாசாமி

ஏனென்றால் தென்காசி, விருதுநகர், ராஜபாளையம் மற்றும் நெல்லை பகுதிகளில் ஆனந்தன் அய்யாசாமி பிரபலமானவராக அறியப்பட்டு வருகிறார். இதனால் தமிழக பாஜக தலைவர் அறிவிப்பில் கடைசி நேரத்தில் கூட ட்விஸ்ட் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருந்தாலும் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவிருப்பதால், நயினார் நாகேந்திரனின் செல்வாக்கு-க்கு நிகராக ஆனந்தன் அய்யாசாமியால் மற்ற கட்சிகளுடன் நட்புடன் செல்ல முடியுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+