இன்னும் செஞ்சி சிறுமியையே கண்டுபிடிக்கல.. இதுல குழந்தைகளுக்கு கேக் வேற! நயினார் நாகேந்திரன் அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சி தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய துரதிர்ஷ்டமாக அமைந்துள்ளது எனவும், தமிழகத்தில் குழந்தைகள் காணாமல் போவதில் ஆச்சரியம் இல்லை, காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்காமல் முதலமைச்சர் விஜய் குழந்தைகளுக்கு கேக் ஊட்டி கொண்டுள்ளார் என தமிழக பாஜக தலைவர் நயினார்நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக பாஜக சார்பாக கள்ளக்குறிச்சியில் தமிழிசை சௌந்தராஜன் தலைமையில் வரும் 18 ஆம் தேதி போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் மாற்றுக்கட்சியில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட நபர்கள் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர்.

இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நபர்கள் பாஜக தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்து கட்சியில் தங்களை இணைந்து கொண்டனர். மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பாஜக கட்சி துண்டை நயினார் நாகேந்திரன் அணிவித்தார்.

Nainar Nagendran Vijay TVK

நயினார் நாகேந்திரன்

பின்னர் நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது," இன்று குழந்தைகள் தினம் அதற்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இன்று தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியில் இருந்து 100 ற்றும் மேற்பட்ட நபர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். தமிழகத்தில் குழந்தைகள் காணாமல் போவதில் ஆச்சரியம் இல்லை, கடந்த மாதம் காணமல் போன குழந்தையை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது.

தவெக ஆட்சி

தவெக ஆட்சி தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரதிர்ஷ்டம், பெண்களுக்கு எதிரான சதிச் செயல்கள் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகின்றன, குழந்தைகள் காணாமல் போகிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் செயலாளர்களே பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்து வருகிறார்கள் எனவும் பெண்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது தவெகவினருக்கு நோய் போல பரவி வருகிறது. தவெக நிர்வாகி ஒருவர் பெண் நிர்வாகியை அவதூறாக பேசுவது போல் ஒரு ஆடியோ கூட நான் கேட்டேன். ஆனால் எதை பற்றியும் முதலமைச்சர் வாய் திறக்காமல் உள்ளார்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ

தவெக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அந்த தவறை செய்து இருப்பார் என அந்த கட்சியில் உள்ளவர்களே சொல்கிறார்கள். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முதலமைச்சர் கையில் தான் உள்ளது. டிஜிபி, உளவுத்துறையும் அவரது கீழ் தான் வருகிறது. அவர்கள் என்ன செய்கிறார்கள் எனவே தெரியவில்லை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு கெட்டு போய்விட்டது.

வன்னியரசு

ஆனால் அதிமுகவில் இப்படி எல்லாம் இல்லை. சின்னதாக ஒரு புகார் வரும் போது உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் தவெக ஆட்சியில் அப்படி எதும் இல்லை. அமைச்சராக வன்னியரசு உள்ளார். அவருக்கு முறையாக எல்லாம் தெரியுமா என தெரியவில்லை. மாவட்ட ஆட்சியர் தலைமை செயலாளருக்கு தான் புகார் கொடுக்க முடியும்.

குழந்தைகளுக்கு கேக்

தலைமை செயலாளர் ஏற்கனவே இதற்கு நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என நடந்து வருகிறது ஆனால் முதலமைச்சர் மாணவர்களுக்கு கேக் ஊட்டி கொண்டு இருக்கிறார்.

மாணிக்கம் தாகூர்

மேகதாது விவகாரத்தில் அங்கு அணை கட்ட கூடாது எனவும் அதை தடுக்க வேண்டும் என்பது தான் பாஜக நிலைப்பாடு. இந்த விவகாரத்தில் தம்பி மாணிக்கம் தாகூரை முதலமைச்சர் விஜய் டெல்லிக்கு அரசு சார்பாக அழைத்து சென்று ராகுல் காந்தியிடம் பேசி மேகதாது அணை கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும்" என தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+