பாஜகவுக்கு நெல்லை இல்லை! நயினார் நாகேந்திரன் தொகுதி மாறுவதற்கு இப்படி ஒரு காரணமா? பேட்டர்னை பாருங்க!
சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தொகுதி மாறுவது குறித்து விசாரித்த போது நெல்லை சட்டசபை தொகுதியில் இருக்கும் ஒரு பேட்டர்னால்தான் அவர் தொகுதி மாறுகிறார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு 27 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது.

எந்தெந்த தொகுதிகள்
மயிலாப்பூர்
தளி
மொடக்குறிச்சி
உதகை
அவிநாசி
திருப்பூர் தெற்கு
கோவை வடக்கு
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை
திருப்பத்தூர்
மதுரை தெற்கு
சாத்தூர்
திருச்செந்தூர்
வாசுதேவநல்லூர்
ராதாபுரம்
நாகர்கோவில்
விளவங்கோடு
ஆவடி
திருவண்ணாமலை
தஞ்சாவூர்
திருவாரூர்
அறந்தாங்கி
ராசிபுரம்
ராமநாதபுரம்
பத்மநாபபுரம்
மானாமதுரை
குளச்சல்
இந்த பட்டியலில் நயினார் நாகேந்திரன் கடந்த முறை போட்டியிட்ட நெல்லை தொகுதி இல்லை. சாத்தூர் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியைவிட்டு விலகப்போகிறார் என்ற நீண்டகால ஊகங்கள் உண்மையாகியுள்ளன.
அந்த வகையில் அதிமுக திருநெல்வேலி தொகுதியைத் தனக்கே தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த தொகுதி மாற்றத்திற்கு ஜோதிட காரணம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் தற்போது வேறு ஒரு காரணம் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா
நயினார் நாகேந்திரன், 2001-ல் ஜெயலலிதாவால் திருநெல்வேலி தொகுதியில் களமிறக்கப்பட்டார். திமுக வேட்பாளர் ஏ.எல்.சுப்பிரமணியனை 722 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, சசிகலாவின் சிபாரிசால் ஜெயலலிதா அமைச்சரவையில் 2001-2006 வரை மின்சாரம், போக்குவரத்து, தொழில்துறை முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.
2006 சட்டசபைத் தேர்தலில் திமுகவின் என். மலையராஜாவிடம் 606 வாக்குகள் வித்தியாசத்தில் நாகேந்திரன் தோல்வியடைந்தார். எனினும், 2011இல் திமுகவின் ஏ.எல்.எஸ். லட்சுமணனை 38,491 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, மீண்டும் கைப்பற்றினார்.
சொற்ப வாக்குகள் வித்தியாசம்
2016இல் லட்சுமணனிடம் 601 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியடைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானதால், நயினார் நாகேந்திரன் 2017 ஆகஸ்ட்டில் பாஜகவில் இணைந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் திருநெல்வேலியில் போட்டியிட்டு, ஏ.எல்.எஸ். லட்சுமணனை 23,107 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இதன் மூலம் ஒரு முறை நெல்லை தொகுதியில் வென்றால் அடுத்த முறை தோல்விதான் என்பதால் நெல்லையை பாஜக கேட்டு வாங்கவில்லை என்றும் இதுவும் நயினார் தொகுதி மாற காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
திருநெல்வேலி தொகுதி
2026-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குத் திருநெல்வேலி தொகுதியை அ.தி.மு.க. தக்கவைத்ததால், உள்ளூர் நிர்வாகிகள் நிம்மதியடைந்தனர். கால் நூற்றாண்டுக்குப் பிறகு இத்தொகுதி நயினார் நாகேந்திரனிடமிருந்து 'விடுவிக்கப்பட்டது' எனக் கருதப்படுகிறது. மாவட்டச் செயலாளர் தச்சூர் என். கணேச ராஜா (முன்னாள் எம்.எல்.ஏ. என். மலையராஜாவின் சகோதரர்) களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
நெருக்கமானவர்கள் கூறுவது என்ன
இன்னொரு காரணமாக நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலின்படி, அவர் ஆறு மாதங்களுக்கு முன்பே சாத்தூர் தொகுதியில் களப்பணிகளைத் தொடங்கியுள்ளார். இத்தொகுதி 23% க்கும் அதிகமான தேவர் சமூக வாக்காளர்களைக் கொண்டிருப்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம்
"எனினும், தி.மு.க. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் (நயினார் நாகேந்திரனின் முன்னாள் சக அமைச்சர்) விருதுநகர் மாவட்டத்தில் வலுவான செல்வாக்கு கொண்டவர். எனவே, தோல்வியை உறுதி செய்ய தி.மு.க. தலைமை அவருக்குச் சிறப்பு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்" என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
களக்காடு தலையணை, நம்பிகோயில் அருவிக்கு போறீங்களா! வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications