Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. டெல்லி அழைப்புக்கு நடுவே சந்திப்பு.. ஆலோசிப்பது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. வரும் 14 ஆம் தேதி நயினார் நாகேந்திரன் அமித்ஷாவை சந்திக்க உள்ள நிலையில் எடப்பாடியுடன் சந்தித்து பேசுவதாகவும், கூட்டணியை பலப்படுத்துவது தொடர்பாக பேசப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

நேற்று அதிமுக பொதுக்குழு நடந்த நிலையில் அதில் வரும் தேர்தலில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது. கூட்டணி குறித்து முடிவு எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் அளித்து ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

nainar-nagendran-meets-edappadi-palaniswami-in-chennai-what-was-discussed

அதிமுக பாஜக கூட்டணி

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தற்போது தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில் தேமுதிக மற்றும் பாமக இன்னும் எந்த அணியோடு கூட்டணி என்றே தெரியவில்லை. இதில் பாமகவிலேயே தந்தை மகன் என இரு பிரிவுகளாக இருப்பதால் பாமகவை கூட்டணிக்குள் இழுக்க அமித்ஷா மேற்கொண்ட முயற்சி பலனளிக்காமல் போனது.

மறுபுறம் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமியும் ஈடுபட்டு வருகிறார். ஆனால் வரும் ஜனவரிக்கு பிறகே யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். ஒரு புறம் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் என பலமாக ஆளும் திமுக கூட்டணி இருந்து வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி வரும் 2026 தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கப்படும் என கூறி வருகிறாரே தவிர எந்த கட்சியும் இணைந்தபாடில்லை.

அதிமுக பொதுக்குழு, செயற்குழு

இந்த நிலையில் தான் நேற்று அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக வரும் தேர்தலில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது. கூட்டணி குறித்து முடிவு எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் அளித்து ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி ஒரு புறம் கூட்டணியை வலுப்படுத்த முய்ற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் அமித்ஷாவோ பல மாதங்களாக ஒன்றிணைக்க முயற்சி செய்து வருகிறார்.

ஓபிஎஸ், அண்ணாமலை டெல்லி பயணம்

ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையனை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் செங்கோட்டையன் தவெகவிற்கு சென்றுவிட்டார். ஓபிஎஸ், டிடிவியும் விஜய் பக்கம் போய்விடக் கூடும் என பேசப்பட்ட நிலையில் தான் ஓ பன்னீர்செல்வம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்தார். பின்னர் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார்.

வரும் 14 ஆம் தேதி டெல்லி செல்லும் நயினார்

டெல்லி சென்றுவிட்டு வந்த கையோடு அண்ணாமலை டிடிவி தினகரனை சந்தித்து பேசினார். எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என்றால் டிடிவி தினகரன் அந்த கூட்டணியில் இடம்பெற மாட்டேன் என்று கூறி வந்த நிலையில் தான் அண்ணாமலை சந்தித்து பேசினார். இதனால் ஓபிஎஸ், டிடிவி மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெறுவார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரும் 14 ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளார்.

எடப்பாடி - நயினார் நாகேந்திரன் மீட்டிங்

அதிமுக பாஜக கூட்டணி தொடர்பாக அமித்ஷா - நயினார் நாகேந்திரன் சந்திப்பு இருக்கும் என்றும் மேலும் கூட்டணியை பலப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. நயினார் நாகேந்திரன் டெல்லி செல்ல உள்ள நிலையில் தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று சென்னை பசுமைவழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார்.

எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரனின் இந்த சந்திப்பின் போது கூட்டணி குறித்து பேசப்படலாம் எனவும், ஓபிஎஸ், டிடிவியை என்.டி.ஏ கூட்டணியில் சேர்க்கலாமா சேர்க்க கூடாதா என்பது பற்றி ஆலோசிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+