Vijay Trisha: திரிஷா கிட்ட இருந்து வெளிய வாங்க விஜய்.. நாகரீகமின்றி பேசிய நயினார் நாகேந்திரன்
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களம் காண்பதால் 4 முனை போட்டி நிலவி வருகிறது. தவெக தலைவர் விஜய் மீது திமுக, அதிமுக, பாஜக 3 கட்சியினரும் விமர்சனம் வைக்கிறார்கள். விஜய் முதலில் திரிஷா கிட்ட இருந்து வெளியில் வந்தால் தான் அரசியலில் நடமாட முடியும் என்பதுடன் நயினார் நாகேந்திரன் நாகரீகமின்றி அவரை ஒருமையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பாவம் விஜய்க்கு எதுவுமே தெரியாது. அனுபவமே இல்லாதவர். முதலில் அவரை வீட்டில் இருந்து வெளியில் வரச்சொல்லுங்கள். திரிஷா கிட்ட இருந்து வெளியில் வந்தால் தான் எல்லாமே நடக்கும். குடும்பத்தோடு நல் உறவு வைக்க வேண்டும். நல்ல தலைவர்கள் வழி நடத்திய இயக்கத்தை நல்ல முறையில் சொல்ல வேண்டும்.

வீட்டை விட்டு வெளியில் வாங்க விஜய்
வீட்டை விட்டு வெளியில் வந்தால் தான் இவையெல்லாம் நடக்கும். களத்தில் கவுன்சிலர் கூட இல்லாதவன், அதாவது கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா. இதுதான் விஜய்க்கு பதில். ஒரு காலமும் அவரால் முடியாது. எதுவாக இருந்தாலும் அனுபவத்தில் பார்க்க வேண்டும் சார். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.
ஒரு ஆளே இல்லை
தான் ஒரு நடிகர் என்பதற்காகவே 32 சதவீதம் வாக்கு வங்கி வரும் என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும். முதலில் வீட்டில் இருந்து வெளியே வரணும் சார். குடும்பதஸ்னாக ஒரு கட்சி நடத்த வேண்டும் சார். அவர் எல்லாம் எனக்கு ஒரு ஆளே கிடையாது. அவர் சொல்வதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. விஜய்காந்திற்கு வராத கூட்டமா. விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாற வேண்டாமா.
ஒரு சீட் கூட வாங்க முடியாது
அனுமார் போல இந்த மலையை தாண்டுவேன் என்று நானும் சொல்லலாம். ஆனால் அது முடியுமா. ஒரு சீட் கூட அவரால் ஜெயிக்க முடியாது. தேர்தலுக்காக மக்களை திமுக ஏமாற்றுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பழைய ஒய்வூதிய திட்டம் உள்ளிட்ட எதையுமே செய்யவில்லை. எங்களுடைய கனவு பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள் இல்லாத தமிழ்நாடு உருவாக்க வேண்டும் என்பதுதான்" என்றார்.












Click it and Unblock the Notifications