கள்ளக்குறிச்சி எம்எல்ஏவுக்கு மாணிக்கம் தாகூர் வக்கலாத்தா.. அநியாயம்.. நயினார் நாகேந்திரன் சுளீர்
சென்னை: தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகிவிட்டது. அரசியல் மாற்றத்திற்காக வாக்களித்த மக்கள் வேதனையடையும் வகையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் நடந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெண் மாவட்ட ஆட்சியரிடம், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசமாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. அவர் மீது விஜய் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் விஜய் எதற்கும் வாய் திறப்பதில்லை. மாணிக்கம் தாகூர் தான் வக்காலாத்து வாங்குகிறார் என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திமுக அரசுக்கும், தவெக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அங்கு எந்தளவுக்கு கொலை, கொள்ளை கற்பழிப்பு நடந்தததோ, இந்த ஆட்சியில் அதைவிட கூடிக் கொண்டிருக்கிறது. இதை நான் கடந்தமுறை சொன்னேன். தீபாவளி நாளில் மட்டும் தமிழகத்தில் 15 கொலைகள் நடந்தது என கூறினேன்.

விஜய் எப்போது வாய் திறப்பார்
அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் 8 கொலைகள் மட்டுமே நடந்திருக்கிறது என கூறினார். ஒரு கொலை நடந்தாலும் தவறு தானே. காங்கிரஸ் கட்சி கொலைகளை ஆதரிக்கிறதா. எந்த காரணத்துக்காக திமுக ஆட்சியை விட்டு வெளியேற்றப்பட்டதோ, அதே காரணத்தை இப்போது தவெக நடத்தி கொண்டிருக்கிறது. தவெகவின் தவெக அமைச்சர்கள், கூட்டணி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவர்.
காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் குழந்தைக்கு என்ன செய்தார் என்பதை பார்த்தீர்கள். அதுவும் பத்திரிகையில் செய்தியாக வந்தது. இப்போது கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ என்ன செய்தார் என்பதும் தெரியும். இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால் எல்லார் வீட்டிலும் பெண்கள், தாய்மார்கள் உள்ளனர். முதலமைச்சர் இதற்கு கூட மௌனம் சாதித்து கொண்டிருக்கிறார். வேறு எதற்கு தான் முதலமைச்சர் விஜய் வாயை திறப்பார் என தெரியவில்லை.
எல்லாத்துக்கும் வக்காலத்து
ஒன்று சம்பந்தப்பட்டவர்கள் சொல்ல வேண்டும். இல்லையென்றால் தலைமை செயலாளர், முதலமைச்சராவது பதில் சொல்ல வேண்டும். இதை எப்படி சமாளிப்பார். முதலமைச்சர் விளம்பரம் மட்டுமே செய்கிறார். இது எந்த வகையில் நியாயம். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மெசேஜ் அனுப்பவில்லை என மாணிக்கம் தாகூர் சொல்கிறார். அவர் அந்த சம்பவத்திற்கு தொடர்பே இல்லை. அவர் ஏன் வக்கலாத்து வாங்குகிறார்.
திமுகவுடன் பல ஆண்டுகள் இருந்து காங்கிரஸ் ஒரே நாளில் துரோகம் செய்து சென்றது. காங்கிரஸ் கட்சியை நம்பி தவெக உள்ளது. இது எந்தளவுக்கு நீடிக்கும் என தெரியிவில்லை. காங்கிரஸ் தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது. இலங்கையில் 1.50 லட்சம் தமிழர்களை கொன்று குவித்தனர். தவெகவின் நிர்வாகம் சரியில்லை. அதிக வருவாய் உள்ள உற்பத்தி மாநிலம் இன்றைக்கு வரி வருவாய் குறைந்துள்ளது. அருகில் உள்ள மாநிலங்களுக்கு உற்பத்தி செல்கிறது. இதற்கு தவெக தான் காரணம்" என்றார்.


Click it and Unblock the Notifications
