கைலாசபுரத்தில் நயினார் நாகேந்திரன் "துண்டு".. நெல்லையை "திருப்பிய" சேலை.. திகுதிகு திருநெல்வேலி பாஜக
சென்னை: நெல்லையில் பாஜகவின் பிரச்சாரம் அனலடித்து கொண்டிருக்கிறது. அதைவிட அதிகமாக, சர்ச்சைகளும், பரபரப்புகளும் கிளம்பி கொண்டிருக்கின்றன. என்னவாம்?
தென் மாவட்டங்களை பொறுத்தவரை தேர்தலில் "ஜாதி"யே முக்கிய பங்காற்றும் நிலைமையில் உள்ளது.. இதை மையப்படுத்தியே தமிழக பாஜகவும் காய்களை நகர்த்தி கொண்டிருக்கிறது.

வாக்கு சதவீதம்: தென் மாவட்டங்களில் பெரும்பான்மை சமுதாயமாக உள்ளது நாடார் வாக்குகளாகும்.. இந்த ஓட்டுக்கள், திமுக பக்கம் சென்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான், பல்வேறு முயற்சிகளை எடுத்து, சரத்குமாரை தங்கள் கட்சிக்கு பாஜக கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது.
நாடார் வாக்குகள்: அந்தவகையில், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி. விருதுநகர் தொகுதிகளில் நாடார் சமுதாய வாக்குகளே அதிகம்... தனித்தொகுதி என்று எடுத்துக் கொண்டால், தென்காசியிலும் நாடார் வாக்குகள் கணிசமாகவே உள்ளது... இதில், நெல்லை தொகுதியை சரத்குமார் கேட்டு வந்தாராம். ஆனால், சரத்துக்கு மட்டுமல்ல, சொந்த கட்சியில் உள்ள இளைஞர்களுக்குக்கும் இந்த சான்ஸை விட்டுத்தர முன்வரவில்லையாம் மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன்.
காரணம், கடந்த ஒருவருடமாகவே நெல்லையை மையமாக வைத்துதான், தொகுதியில் களப்பணியில் மும்முரமாகி வந்தார்.. அதிலும், மீனாட்சிபுரத்தில் மத்திய இணையமைச்சர் சிங்கை அழைத்துவந்து நலத்திட்ட உதவிகளையும் செய்திருந்தார்..
பாளையங்கோட்டை: அதைவிட முக்கியமாக, பாளையங்கோட்டையில் பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தை நடத்தியவர்களில் முதன்மையானவராக திகழ்ந்ததே நயினார்தான்.. எப்படியும் இந்த முறை தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே, படுபிஸியாக களப்பணியாற்றி வந்தார்.
நயினார் ஆசைப்பட்டதுபோலவே, நெல்லை தொகுதி கைக்கு வந்துசேர்ந்துவிட்டது.. தன்னுடைய முதல் பிரச்சாரத்தையே, மீனாட்சிபுரத்தில்தான் ஆரம்பித்தார் நயினார்.. கிராமப்புறங்களில் வாக்கு சேகரித்த நயினார் நாகேந்திரன், நெல்லை மாநகர பகுதிகளிலும் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார். அந்தவகையில், மீனாட்சிபுரம் சந்திப்பு, கைலாசபுரம் என்று படுபிஸியாகவே பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஸ்பெஷல் ஆரத்தி: பல இடங்களில் பெண்கள் நயினார் நாகேந்திரனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதிலும், கைலாசபுரத்தில் 3 பெண்கள் ஒரே நேரத்தில் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அப்போது, தர்பூசணி பழத்தில், பாஜக தேசிய தலைவர்கள் மோடி - அமித்ஷா - மத்திய அமைச்சர் எல்.முருகன் - கூட்டணி கட்சித் தலைவர்களின் உருவம் வரையப்பட்டிருந்தது.. இந்த தர்பூசணி பழம் நயினாரை வெகுவாக ஈர்த்துவிட்டது. உடனே அந்த தர்பூசணி பழத்துடன் பிரச்சாரத்தில் ஈடுபட துவங்கினார்.
தாமரை சின்னம்: அதேபோல, நயினார் நாகேந்திரன் பிரச்சாரத்தில், பாஜக பெண்கள், தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட சேலையை அணிந்து வந்திருந்தனர்.. கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள், தாமரை சின்னத்தால் நெய்யப்பட்ட சேலைகளை ஒரே நேரத்தில் அணிந்துவந்து வாக்கு கேட்டதால், கைலாசபுரமே திகைத்து போய்விட்டது..
ஒட்டுமொத்த நெல்லையையும் இந்த சேலை கவனிக்க செய்தது.. அதேசமயம், சர்ச்சையையும் இழுத்துவிட்டுள்ளது.. இத்தனை சேலைகளும், வேட்பாளர் சார்பில் பெண்களுக்கு வழங்கப்பட்டதா? அல்லது கட்சி சார்பில் வழங்கப்பட்டதா என்ற சந்தேகம் தேர்தல் அதிகாரிகளுக்கு வந்துவிட்டது.. ஒருவேளை, வாக்காளர்களுக்கு இதுபோல சேலை - வேட்டி தரப்பட்டிருந்தால், அதுவும் தேர்தல் விதிமீறல் என்றே கருதப்படும்.
என்னாகும்: வேட்பாளர்களை அறிவிக்கும் முன்பேயே, நெல்லை தொகுதியில், பாஜக வேட்பாளராக தன்னை தானே கட்சி அறிவித்துக்கொண்ட நயினார் நாகேந்திரனுக்கு, இப்படி ஒரு சிக்கல் சேலை மூலம் கிளம்பி உள்ளது.. என்னாகுமோ தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications