விஜயுடன் கூட்டணியா?.. சஸ்பென்ஸ் வைக்கும் நயினார் நாகேந்திரன்
சென்னை: விஜய் கட்சிக்கு மட்டுமல்ல எல்லாவற்றிக்கும் தமிழ்நாடு அரசு தடை போடுகிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், வருகின்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்குமா என்பது குறித்தும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தூத்துக்குடியில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சாதி வாரிய கணக்கெடுப்பு தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைய விவாதம் நடந்துள்ளது. இந்த கணக்கெடுப்பை, மாநில அரசு எடுக்க வேண்டுமா, மத்திய அரசு எடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.

சாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் எடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசப்பட்டது. மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரள எல்லையில் துறைமுகம் திறக்கப்பட்டதால் நமக்கு வர வேண்டிய திட்டங்களில் எந்த பாதிப்பும் இல்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு எதிர்ப்புகள் காரணமாக துறைமுக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
தேர்தல் வர இன்னும் ஓராண்டு உள்ளது. கூட்டணியில் கட்சிகள் சேர்வது குறித்து அப்போது தெரியவரும். மத்திய அரசின் அறிவிப்புக்கு கேரள முதல் மந்திரியே பாராட்டி தான் பேசியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் கட்சியை சேர்க்க பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு தேர்தல் வர இன்னும் ஓராண்டு இருக்கிறது. அப்போது பார்க்கலாம் என்றார்.
தமிழ்நாடு அரசு விஜய் கட்சிக்கு மட்டுமல்ல திருவல்லிகேணியில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சிக்கும் தடை விதித்தார்கள். தமிழ்நாடு அரசு எல்லாவற்றிக்கும் தடை விதிக்கிறது என்றார்.
-
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications